ராதிகாவை சந்திக்கும் பாக்கியா? வெளிவரும் உண்மைகள், சீரியலில் அடுத்த அதிரடி திருப்பம்!

0
ராதிகாவை சந்திக்கும் பாக்கியா? வெளிவரும் உண்மைகள், சீரியலில் அடுத்த அதிரடி திருப்பம்!
ராதிகாவை சந்திக்கும் பாக்கியா? வெளிவரும் உண்மைகள், சீரியலில் அடுத்த அதிரடி திருப்பம்!
ராதிகாவை சந்திக்கும் பாக்கியா? வெளிவரும் உண்மைகள், சீரியலில் அடுத்த அதிரடி திருப்பம்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியை விட்டு பிரிந்து செல்ல முடிவு எடுத்த பாக்கியா வீட்டை விட்டு கிளம்பி விடுகிறார். மறுபக்கத்தில் அவர் ராதிகாவை சந்தித்தால் அவரிடம் என்ன கேள்வி கேட்பார் என்ற பரபரப்பான கதைக்களத்தை நோக்கி இந்த சீரியல் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த அந்த முக்கியமான தருணம் இப்போது ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது, பாக்கியா உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தையும் முட்டாளாக்கி காதலி ராதிகாவுடன் பழகி வந்த கோபி இப்போது கையும் களவுமாக மாட்டி இருக்கிறார். இதை தொடர்ந்து இத்தனை நாட்கள் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்ற ஆதங்கத்தில் இருக்கும் பாக்கியா, கோபியின் அத்தனை நாடகத்தையும் தனது குடும்பத்தாருக்கு தெரியப்படுத்துகிறார்.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில், கோபியை பற்றி பாக்கியா சொல்லும் உண்மைகளை கேட்கும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். இதோடு இல்லாமல் கோபி தனக்கு சந்தோஷத்தை கொடுக்கும் வாழ்க்கையை தேடிக்கொள்ளலாம் என்று சொல்லி விட்டு அந்த வீட்டில் இருந்து கிளம்புகிறார் பாக்கியா. இப்போது அவரை சமாதானப்படுத்துவதற்காக எழில் மற்றும் செல்வி இருவரும் பாக்கியாவுக்கு பின்னால் செல்கின்றனர். இதை தொடர்ந்து ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரும் கதைக்களத்தில் இப்போதைக்கு பாக்கியா, கோபியின் வீட்டுக்கு செல்லப்போவதில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – முழு மாதிரி தேர்வு!

மறுபக்கத்தில், நடந்த அசம்பாவிதங்களுக்கு கோபியை நிற்க வைத்து வீட்டில் உள்ள அனைவரும் கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால், கோபி பதில் ஒன்றும் சொல்லாமல் இன்னமும் மௌனம் சாதித்து வருகிறார். இப்படி இருக்க, கோபியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ராதிகாவின் அம்மா வழக்கம் போல பேசிக்கொண்டிருக்கிறார். இந்த சூழலில் பாக்கியா, ராதிகாவை சந்திப்பாரா, அப்படி சந்தித்தால் அவர் ராதிகாவிடம் என்ன கேட்பார் என்ற திருப்பத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here