கோபி மீது புகார் கொடுக்கும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

0
கோபி மீது புகார் கொடுக்கும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் - ப்ரோமோ ரிலீஸ்!
கோபி மீது புகார் கொடுக்கும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் - ப்ரோமோ ரிலீஸ்!
கோபி மீது புகார் கொடுக்கும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

பாக்கியா சுயமரியாதையுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இருந்தாலும், கோபியை மன்னித்து விடாமல் விவாகரத்து பாத்திரத்தில் ஏமாற்றி கையெழுத்து வாங்கியது என அனைத்திற்கும் சேர்த்து காவல்நிலையத்தில் கோபி மீது பாக்கியா புகார் கொடுக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவின் அதிரடி முடிவை கண்டு குடும்பத்தினர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். அதாவது, பாக்கியாவிற்கு தெரியாமல் கோபி உண்மையை மறைத்து மறைத்து வைத்து கொண்டிருந்தார். ஆனால், பாக்கியாவே உண்மையை தெரிந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது. ஆனாலும், கூட கோபி ஏதாவது பொய் சொல்லி தப்பித்துவிடலாம் என்று தான் நினைத்தார். ஆனால், தற்போது பாக்கியா கண் முன்னாடி அனைத்தையும் பார்த்ததால் எதையுமே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

Exams Daily Mobile App Download

இதற்கு பிறகு பாக்கியா என்ன முடிவெடுக்க போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். கோபியை மன்னித்து ஏற்றுக்கொள்வாரா அல்லது கோபியின் ஆதரவு இல்லாமல் பாக்கியாவே குடும்பத்தை கவனித்து கொள்ள போகிறாரா என எதிர்பார்ப்புடன் இருக்கும் நேரத்தில் பாக்கியா அதிரடியாய் ஒரு முடிவெடுத்துள்ளார். அதாவது, பாக்கியா கோபியிடம் இதுவரை உங்களுக்கு பிடிக்காத மனைவியாக உங்களுடனே இருந்தேன். ஆனால், தற்போது முதன் முறையாக உங்களுக்கு பிடித்த ஒன்றை செய்ய போகிறேன் என கூறுகிறார். பாக்கியா தற்கொலை எதுவும் செய்துகொள்வாரோ என குடும்பத்தினர்கள் அனைவரும் பயந்தனர்.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகாவை திருமணம் செய்யும் கோபி? அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

பின்பு, பாக்கியா இதற்கு பிறகும் இந்த வீட்டில் எதற்காக இருக்க வேண்டும் என சுயமரியாதையுடன் வீட்டை விட்டே செல்கிறார். குடும்பத்தினர்கள் அனைவரும் பாக்கியாவை தடுத்தும் கூட பாக்கியா வீட்டை விட்டு சென்றுவிடுகிறார். பின்பு, பாக்கியாவை கோபி ஏமாற்றி விவாகரத்து பாத்திரத்தில் கையெழுத்து வாங்கியது மற்றும் பாக்கியாவை ஏமாற்றியதற்காக காவல் நிலையத்தில் கோபி மீது பாக்கியா புகார் கொடுக்கிறார். தற்போது, கோபியை போலீசார் கைது செய்து அழைத்து செல்லும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here