T20 உலகக்கோப்பை அணி அறிவிப்பு எதிரொலி – பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் விலகல்!

0
T20 உலகக்கோப்பை அணி அறிவிப்பு எதிரொலி - பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் விலகல்!
T20 உலகக்கோப்பை அணி அறிவிப்பு எதிரொலி - பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் விலகல்!
T20 உலகக்கோப்பை அணி அறிவிப்பு எதிரொலி – பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் விலகல்!

டி20 உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் பயிற்சியாளர் பதவியில் இருந்து மிஸ்பா மற்றும் வக்கார் யூனுஸ் திடீரென விலகியுள்ளார்.

பதவி விலகல்:

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்ற உலக கோப்பை போட்டி அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. டி20 உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனுஸ் பதவி விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தலைமைப் பயிற்சியாளர்களாக இருவரும் நியமிக்கப்பட்டனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!

இருவருக்கும் பதவி காலம் முடிய இன்னும் ஓராண்டு காலம் இருக்கும் நிலையில் அவர்கள் பதவியில் இருந்து விலகியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது குறித்து மிஸ்பா உல் ஹக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்குப் பின் நான் தனிமைப்படுத்திக கொண்ட காலம் கடந்த 24 மாதங்கள் கடினமாக உழைத்ததை நினைவுபடுத்தியது. அடுத்த சில மாதங்கள் என் குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன்.

பயோ-பபுள் சூழல் மேலும் என்னை அழுத்தத்தில் தள்ளும் என்பதால், பதவியிலிருந்து விலகுகிறேன். நான் பதவி விலகுவதற்கு இது சரியான நேரம் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், அடுத்துவரும் சவால்களைச் சந்திக்க என் மனது சரியான நிலையில் இருக்கிறது என நான் நினைக்கவில்லை. கடந்த 24 மாதங்களாக அணியைச் சிறந்த நிலையில் வழிநடத்தி இருக்கிறேன். மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன். என்னுடைய அணிக்கும் நிர்வாகத்துக்கும் நன்றி என கூறியுள்ளார்.

IND vs ENG டெஸ்ட் தொடர் – அஷ்வினை ஓரங்கட்டிய கேப்டன் கோஹ்லி? நெட்டிசன்கள் விமர்சனம்!

அதனை தொடர்ந்து வக்கார் யூனுஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியதாவது ‘மிஸ்பா அவரின் முடிவை என்னிடம் பகிர்ந்துகொண்டு எதிர்காலத் திட்டம் குறித்து தெரிவித்தார். எனக்கும் அவர் எடுத்த முடிவு சரியானது. நானும் அவருடன் பயணிக்க முடிவு எடுத்ததால், நானும் பதவி விலகுகிறேன். இருவரும் ஒன்றாகவே பணியைத் தொடங்கினோம். ஒன்றாகவே விலகுகிறோம். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுடன் பணியாற்றியது, குறிப்பாக இளைஞர்களுடன் பணியாற்றியது எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது. கடந்த 16 மாதங்களாக பயோ-பபுள் சூழல் எனக்குப் பெரிய பாதிப்பை மனதில் ஏற்படுத்தியது.

இதுபோன்று நான் ஒருபோதும் உணர்ந்தது இல்லை. அடுத்த 8 மாதங்கள் பாகிஸ்தான் அணி பரபரப்பாக இயங்க இருக்கிறது. அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவேன். எனக்கு ஆதரவு அளித்த கிரிக்கெட் அணி நிர்வாகம், வாரியம், எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என கூறி இருந்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!