பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி!
பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி!
பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று தொடங்கிய பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் அப்ரிடி இடம்பெறவில்லை.

ரசிகர்கள் அதிர்ச்சி:

நாடு முழுவதும் அதி தீவிரமாக பரவி கொண்டிருக்க கூடிய ஓமைக்ரான் வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட சில கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கக்கூடிய கொரோனா 3 ஆம் அலையை தடுக்கும் விதமாக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிகபட்ச தீவிர தன்மையுடன் பரவிக்கொண்டிருக்க கூடிய கொரோனா வைரஸால் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

தமிழக அரசில் ரூ.58600 சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு – பிப்.23 கடைசி நாள்!

இதை தொடர்ந்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 2022 இன் தொடக்கப் போட்டி கராச்சியில் நடைபெறவிருந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா பரிசோதனையான RT-PCR சோதனை செய்யப்பட்டது. இப்பரிசோதனை முடிவில் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது அப்ரிடிக தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

நட்சத்திர ஆல்-ரவுண்டர் அப்ரிடி PSL யில் 50 போட்டிகளில் விளையாடி 465 ரன்களை எடுத்துள்ளார். மேலும் ஃபிரான்சைஸிகளான சுல்தான்ஸ், பெஷாவர் சல்மி மற்றும் கராச்சி கிங்ஸ் ஆகிய 3 அணிக்காக PSL யில் விளையாடியுள்ளார். 41 வயதான ஷாஹித் அப்ரிடி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி உள்ளார். கொரோனா நோய்த்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த பிறகு அவர் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் மீண்டும் இணைக்கப்படுவார் என்று PSL குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here