அமிர்தாவை காதலிப்பதாக கூறும் எழில், உறுதுணையாக நிற்கும் பாக்கியா – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோடு!

0

அமிர்தாவை காதலிப்பதாக கூறும் எழில், உறுதுணையாக நிற்கும் பாக்கியா – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோடு!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அமிர்தாவை காதலிக்ககூடாது என எழிலிடம் ஈஸ்வரி சத்தியம் வாங்குகிறார். மறுபக்கத்தில் அமிர்தாவை காதலிப்பதாக எழில் பாக்கியாவிடம் கூற அவரும் அதற்கு சம்மதம் சொல்கிறார்.

பாக்கியலட்சுமி எபிசோடு

இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோடில் அமிர்தா வீட்டுக்கு வருவது பிடிக்கவில்லை என்று ஈஸ்வரி சொல்லிக்கொண்டிருக்க எனக்கு என்னமோ எழில் அவளை காதலிப்பதாக நினைக்கிறேன் என செழியனும் அவருடன் சேர்ந்து கொள்கிறார். ஆனால், அப்படி எல்லாம் இருக்காது என பாக்கியா கூற, இல்லை எனக்கு பயமாக இருக்கிறது. நான் எழிலிடம் இது பற்றி பேச வேண்டும். அவன் எந்தவொரு விஷயத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டான். இது சரி வராது என்று புலம்புகிறார் ஈஸ்வரி. மறுபக்கத்தில், எழிலுடன் பைக்கில் வரும் அமிர்தா எழில் அவருக்காக செய்த சில விஷயங்களை நினைத்து கொண்டிருக்கிறார்.

அப்போது, சேர்ந்து இருக்க ஆசையா இருக்கு என அமிர்தா சொல்ல உடனே பைக்கை நிறுத்தும் எழில் ஏதோ சொன்னீங்களே என்ன சொன்னீங்க என கேட்கிறார். அப்போது நான் ஒன்றும் சொல்லவில்லையே என அமிர்தா சமாளிக்க நீங்க இதை தான் சொன்னீங்க என எழில் கேட்டுவிடுகிறார். ஆமாம், எனக்கு உங்க வீட்டில் உள்ள எல்லாரையும் பிடித்திருக்கிறது. அவங்களோடு இருப்பது பிடித்திருக்கிறது என அமிர்தா சொல்ல நீங்க எப்போதும் எங்க கூட தான் இருப்பீங்க என கூறிவிட்டு அவரை டிராப் செய்தவுடன் வீட்டுக்கு வருகிறார் எழில். மறுபக்கத்தில், எழில் வந்தவுடன் அமிர்தா பற்றி பேச வேண்டும் என ஈஸ்வரி காத்துக்கொண்டிருக்கிறார்.

அந்நேரம் எழில் வரவும், நீ அமிர்தாவுடன் பிரண்ட் ஆக தான் பழகுகிறாயா என ஈஸ்வரி கேட்க அதிர்ச்சியாகும் எழில் ஆமாம் என்று சொல்கிறார். தொடர்ந்து, எனக்கு உன்னை பார்க்கும் போது வேறு மாதிரி தோன்றுகிறது. அமிர்தா பாவம் தான். இந்த வயசில் அவளுக்கு இப்படி ஆகி இருக்க கூடாது. ஆனால் நாம் என்ன பண்ண முடியும். இனிமே நீ அவளிடம் பார்த்து பழகு. அவள் உனக்கு வெறும் பிரண்ட் மட்டும் தான். வேறு எதுவும் இல்லை என்று என் தலை மேல் அடித்து சத்தியம் செய் என்று பேசுகிறார் ஈஸ்வரி. இப்போது, வேறுவழியில்லாமல் சத்தியம் செய்யும் எழில் பிறகு அமிர்தாவை நினைத்து கவலை கொள்கிறார்.

தொடர்ந்து எழிலிடம் வந்து பேசும் பாக்கியா, அம்மாவிடம் இருந்து எதையாவது மறைக்கிறீயா எழில். அமிர்தாவுக்கும் உனக்கும் இடையில் எதாவது இருக்கா என்று கேட்கிறார் பாக்கியா. அப்போது, நான் பாட்டியிடம் சொன்னது எல்லாமே பொய் தான். நான் அமிர்தாவை விரும்புகிறேன் அம்மா. அவங்க வாழ்க்கையில் இழந்த அனைத்து சந்தோஷத்தையும் கொடுக்கணும் என்று நினைத்தேன். அமிர்தா பாவம். கணேஷ் இல்லாமல் அப்பா, அம்மா இருவரும் கஷ்டப்படுகிறார்கள். அதனால் அவர்களுக்கும் ஒரு மகனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறன். நான் அமிர்தாவிடம் இது பற்றி பேசி விட்டேன். அவர்கள் ஆரம்பத்தில் என்னிடம் பேசாமல் இருந்தார்கள். இப்போது தான் அவர்கள் என்னை நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

நீ என் கூடவே இருங்கம்மா. நான் எல்லாவற்றையும் சமாளிப்பேன். அமிர்தாவை திருமணம் செய்து கொள்வேன் என உறுதியாக கூறுகிறார் எழில். ஆனால், இந்த வீட்டில் எல்லாரையும் சமாளிக்க வைப்பது கஷ்டம். இதை விட முக்கியம் அமிர்தாவை நீ திருமணம் செய்து கொள்வேன் என்று வாக்கு கொடுத்திருந்தால் அதை செய்ய வேண்டும். அவள் குழந்தையை உன் குழந்தை போல பார்த்துக்கொள்ள வேண்டும். அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த வீட்டில் உள்ளவர்கள் அவளை காயப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீ இதில் உறுதியாக இருந்தால் நான் உன்னுடன் இருப்பேன் என்று பாக்கியா சம்மதம் சொல்வதுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here