Home Blog Page 7467

ஏப்ரல் 3 நடப்பு நிகழ்வுகள்

மாநிலம்

தமிழ்நாடு

கடலோர கூட்டுப் பயிற்சிக்கு சென்னை வந்தது தென்கொரிய கப்பல்

 • கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், இந்தியா – தென்கொரியா நாடுகள் இடையே கடந்த 2004-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி,இருநாட்டு கடலோரக் காவல் படைகளும் இணைந்து கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன .இந்தியா – தென்கொரியா கடலோரக் காவல்படையின் 6-வது கூட்டுப்பயிற்சி,ஏப்ரல் 5-ம் தேதி சென்னை கடல் எல்லைப் பகுதியில் நடக்கிறது.இதில்பங்கேற்பதற்காக, தென்கொரியா நாட்டு கடலோரக் காவல்படையின் ‘பதாரோ’ என்ற கப்பல சென்னை துறைமுகம் வந்தடைந்தது.

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

 • மத்தியஅரசுடன் இணைந்து முதல் கட்டமாக 500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல்ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது.இந்த ஆய்வகத்தில் பயிற்சி அளிக்கவுள்ள 500 ஆசிரியர்களுக்கு, அமெரிக்க பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.நலிந்த பிரிவினருக்கு தொடக்கநிலை வகுப்புகளில், 25 சதவீத இடஒதுக்கீட்டை கடைபிடிக்காத தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசியசெய்திகள்

எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உத்தரவு: இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

 • எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.எனினும் 10 நாட்களுக்குப் பிறகு இது பற்றி விரிவான விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது.

இடஒதுக்கீடு தொடரும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

 • ஏற்கெனவே அமலில் உள்ள, தலித் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுவரும் இடஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்தமாற்றமும் செய்யும் எண்ணம் மத்தியஅரசுக்கு இல்லை என்றும் மத்திய அரசு இடஒதுக்கீட்டுக் கொள்கையையே முடிவுக்குக் கொண்டு வர உள்ளதாக வதந்திகள் கிளப்பிவிடப்படுகிறது. இப்படி யூகங்களால் உருவாகியுள்ள வதந்திகள் முற்றிலும் தவறானது” என்றார்.

பொய் செய்தி உத்தரவை ரத்து செய்து பிரதமர் உத்தரவு அளித்தார்.

 • பொய் செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் உத்தரவை ரத்து செய்து பிரதமர்மோடி உத்தரவிட்டுள்ளார்.பொய் செய்திகளை பரப்பும் பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதிஇரானி அறிவித்தார்.சமூக வலைதளங்கள் மூலம் போலியான செய்திகளை பரவச் செய்வதாலும், சிலபத்திரிகைகள், பத்திரிகையாளர்களும், தங்களுக்கு வேண்டாதவர்கள் பற்றி தவறான செய்திகளைப் பரப்பிவிடுவதாலும் இத்தகைய நடவடிக்கை அவசியம் என அவர் தெரிவித்திருந்தார்.

நதிகள் இணைப்பை துரிதப்படுத்த வேண்டும் :மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது

 • நதிகள் இணைப்பை துரிதப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற எம்பிக்கள் நிலைக்குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
 • இந்தியாவில் வெள்ளம் காரணமாக 456.40 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாதிப்படைந்துள்ளன.வெள்ளப்பெருக்கை சமாளிக்க தயாராக இருக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குறித்தும் இக்குழு ஆய்வு செய்துள்ளது.இதன்படி, வெறும் 8 மாநிலங்கள் மட்டுமே 192 அணைகளின் வெள்ளப்பெருக்கை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேசியசெய்திகள்

பொலிவியாவில் நிலநடுக்கம்: ரிக்டர்அளவு 6.8

 • தென்அமெரிக்க நாடான பொலிவியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியது.
 • தென்அமெரிக்க நாடான பொலிவியாவில் பராகுவே எல்லை ஓரத்தில் 562 கிலோமீட்டர் ஆழத்திற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியது.இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நாட்டின் பல இடங்களில்உணரப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தமிழ்மொழி திருவிழா தொடக்கம்

 • சிங்கப்பூரில் தமிழ்மொழி திருவிழா கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கியது.இவ்விழா வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.சிங்கப்பூரின் 4 அதிகாரபூர்வ மொழிகளில் தமிழும் ஒன்று.அந்த நாட்டில் தமிழ் செழித்தோங்க அரசு ஆதரவுடன் கடந்த 2000-மாவது ஆண்டில் ‘தமிழ்மொழிகவுன்சில்’ தொடங்கப்பட்டது.அந்த அமைப்பு சார்பில் கடந்த 2007 முதல்ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ்மொழி திருவிழா நடத்தப்படுகிறது.

வணிகசெய்திகள்

பெட்ரோல், டீசல்விலை: 4 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் உயர்வு

 • பெட்ரோல் விலை, 13 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு 76.72 ரூபாயாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள்அதிகரித்து, லிட்டருக்கு 68.38 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்ய தொடங்கின. அதன்பின் நாள்தோறும் சிலகாசுகள் அளவுக்கு பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், அது மாதம் முழுவதும் மொத்தமாக பார்க்கும் போது, விலை உயர்வு அதிகமாக இருந்து வருகிறது.

பதவியேற்புகள்

நாஸ்காம் தலைவர்:தேப்ஜானிகோஷ் தேர்வு

 • இந்திய தகவல்தொழில் நுட்பத்துறை கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக தேப்ஜானிகோஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் இன்டெல் நிறுவனத்தின் தெற்காசிய பிரிவின் நிர்வாக இயக்குநர் பதவியை sவகித்தவராவார்.

விளையாட்டுசெய்திகள்

ரபேல்நடால் மீண்டும் முதலிடம்

 • டென்னிஸ் தரவரிசை பட்டியலில் நடால் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ரபேல் நடால் சமீபத்தில் நம்பர் ஒன் இடத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர்பெடரரிடம் இழந்திருந்தார்.

‘ஸ்விங்கிங்’ பிலாண்டர் பிரமாதம்: தென்ஆப்பிரிக்கா வரலாற்று தொடர் வெற்றி

 • ஜொஹான்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்ஸில் 492 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய தோல்வி கண்டது.தென்ஆப்பிரிக்கா அணி 1970-க்குப் பிறகு தங்கள் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி 3-1 என்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

PDF Download

ஏப்ரல் 2 நடப்பு நிகழ்வுகள்

தமிழ்நாடு

இரண்டாம் உலகப்போரின் போது திரிகோணமலை கடலில் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு: 74 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

 • இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் போர் விமானகுண்டு வீச்சால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து பயணிகள் கப்பல் 74 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையின் திரிகோணமலை கடல்ப குதியில் மீட்கப்பட்டுள்ளது.
 • இலங்கையின் கிழக்கே அமைந்துள்ள திரிகோணமலை துறைமுகம் இந்தியப் பெருங்கடலின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இதனால் இந்த துறைமுகத்தைகைப்பற்ற பல யுத்தங்கள் நடந்துள்ளன. சோழர்கள், போர்த்துகீசியர், நெதர்லாந்து, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலும் திரிகோணமலை துறைமுகம் இருந்துள்ளது.

காவிரிமேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மோடிக்கு கிரண்பேடி கடிதம்

 • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பிரதமருக்கு ரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார். அதே நேரத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர புதுச்சேரி அரசுக்கு அனுமதி தராதது தொடர்பாக வாட்ஸ் அப்பில் விளக்கியுள்ளார்.

இந்தியாவுடன் தென்கொரிய கூட்டுப்பயிற்சி: கடலோர காவல்படை கப்பல் சென்னை வருகை

 • இந்தியா – தென் கொரியா கட லோரக் காவல்படையின் கூட்டுப் பயிற்சி 5-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக, தென் கொரிய கடலோரக் காவல் படைக் கப்பல் சென்னை வருகிறது.இந்தியா – தென் கொரியா நாடுகள் இடையே பொருளாதாரம், ராணுவ உறவுகள் மேம்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இரு நாடுகளுக்கிடையே கடலோரக் காவல் படையின் கூட்டுப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கூட்டுப் பயிற்சி வரும் 5-ம் தேதி சென்னை கடல் எல்லைப் பகுதியில் நடைபெறுகிறது.

தெலங்கானா

தெலங்கானாவில் புதியகட்சி உதயமாகிறது: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 • தெலங்கானாவில், தெலங்கானா போராட்ட சமிதியின் தலைவர் கோதண்டராம் புதிய கட்சி தொடங்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் இன்று வெளியிட உள்ளார்

இந்தியா

ஊழல் அதிகாரிகளை கண்டு பிடிக்க ஆதார்அட்டை, பான் எண்உ தவும்: ஊழல் கண்காணிப்பு ஆணையர் தகவல்

 • வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிக்கும் ஊழல்அதிகாரிகளை கண்டு பிடிக்க ஆதார் அட்டை உதவும் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி குறைப்பு கிடையாது மத்தியஅரசுஅறிவிப்பு

 • எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நி்ர்ணயித்து வந்தன. பின்னர், அவற்றின் விலைமாதம் இருமுறை என மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன்மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்ய தொடங்கின. அதன்பின் நாள்தோறும் சிலகாசுகள் அளவுக்கு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டபோதிலும், அதுமாதம் முழுவதும் மொத்தமாக பார்க்கும்போது, விலை உயர்வு அதிகமாக இருந்து வருகிறது. இப்போது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிட்டது.

பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

 • குடியரசுத் தலைவர் மாளிகையில் 02 ஏப்ரல் 2018 நடைபெற்ற சிவில் விருது வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், ஐந்து பேருக்கு பத்ம பூஷண் விருதுகளையும், 38 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளையும் வழங்கினார்.

          விருது பெற்றோர் விவரம் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

விஞ்ஞானசெய்திகள்

சீனாவின்டியான்காங்-1’ விண்வெளி நிலையம் பசிபிக்கடலில் விழுந்து நொறுங்கியது

 • 2011-ம் ஆண்டு சீனா அனுப்பிய ‘சொர்க்கத்தின்அரண்மனை’ என்று அழைக்கப்படும் டியான்காங்-1 விண்வெளி நிலையம், இன்று பசிபிக்கடலில் விழுந்து நொறுங்கியது என்று சீனா விண்வெ ளிமை யம்தெரிவித்துள்ளது.
 • பூமியின் நீள்சுற்று வட்டப்பாதைக்குள் மீண்டும் இந்த விண்வெளிநிலையம் நுழைய முயன்றபோது, இந்திய நேரப்படி காலை45 மணிக்கு பசிபிக்கடலில் விழுந்து. வானில் இருந்து கீழேவிழும் போதே விண்கலத்தின் பெரும்பாலான பாகங்கள் ஏறக்குறைய எரிந்து சாம்பலாகிவிட்டன.
 • 2023-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தரமாக விண்வெளிநிலையம் அமைக்கும் நோக்கில், அதற்கு முன்னோட்டமாக 2011-ம் ஆண்டு சீனா டியான்காங்-1 என்ற விண்வெளி மையத்தின் மாதிரியை அனுப்பியது.

செவ்வாய்கிரகத்தில் இறங்க சூப்பர்சோனிக் பாராசூட்டை வெற்றிகரமுடன் சோதனை செய்த நாசா

 • செவ்வாய்கிரகத்தில் இறங்குவதற்காக சூப்பர்சோனிக் பாராசூட்டை அமெரிக்கா வின்விண்வெளி ஆய்வுமையம் வெற்றிகரமுடன் விண்ணில்அனுப்பி சோதனை செய்துள்ளது.

வெள்ளிகிரக ஆசிட் மேகங்களிடையே வாழும் வேற்று கிரகவாசிகள் நாசா தகவல்

 • ஏலியன்கள் வெள்ளிகிரகத்தின் அமில மேகங்களுக்கு நடுவே வாழக்கூடும் என அமெரிக்க விண்வெளி மையமான நாசா அறிவித்துள்ளது.

அதிநவீன தடுப்பு ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து ரஷியா

 • எதிரிகள் நாட்டு ஏவுகணைகளை தடுத்து, தாக்கி அழிக்கும் அதிநவீன தடுப்பு ஏவுகணையை கஜகஸ்தான் பகுதியில் ரஷியா வெற்றிகரமாக பரிசோதித்தது.

உலகம்

அமெரிக்காவின் எச்-1 பி விசாவுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைதொடங்கியது: கடும் விதிமுறைகள் அமல்

 • அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவோர்களுக்கான எச்-1 பி விசா வழங்கும் நடை முறை இன்று தொடங்கியது.விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையை மிகக்கடுமையாக்க அதிபர் டெனால்ட்டிரம்ப் உத்தரவிட்டு இருப்பதால், சிறு குறைகள் இருந்தாலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
 • அமெரிக்காவில் குடியேறாமல், அங்கு தங்கி பணியாற்றுபவர்களுக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா பெறுவோர், 3 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி அங்கு பணியாற்றலாம்.

ஒரு நாளைக்கு 50 லிட்டர் தண்ணீர்; உலகின் முதல் தண்ணீர் காவலர்கள்; கேப்டவுனின் மாற்றங்கள்

 • ‘டேஜீரோ’ நாளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகருக்கு உலகில் முதல்முறையாக தண்ணீரைப் பாதுகாக்ககாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கோஸ்டாரிகா அதிபராக கார்லோஸ் ஆல்வாரேடோ தேர்வு

 • கோஸ்டாரிகா நாட்டில் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த ஞாயிற்று கிழமை நடந்தது.   இந்த தேர்தலில் ஆளும் சிட்டிசன்ஸ் ஆக்சன் கட்சி மற்றும் நேசனல் ரெஸ்டோ ரேசன் கட்சி ஆகியவற்றுக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டது.இதில் ஆளுங்கட்சி சார்பில் கார்லோஸ்ஆல்வாரேடோ (வயது 39) போட்டியிட்டார்.  அவரை எதிர்த்து பேப்ரிசியோ ஆல்வாரேடோ (வயது 43) போட்டியிட்டார்.  இந்த தேர்தலில் 60 சதவீதத்திற்கும் கூடுதலாக வாக்குகளை பெற்று கார்லோஸ் வெற்றிபெற்றார்.

ஒரே இடத்தில் 1,372 ரோபோட்டுகள் ஆனந்த நடனம்புதிய கின்னஸ் சாதனை

 • இத்தாலியில் ரோபோட்டுகள் நடமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1,372 ஆல்பா 1 எஸ்ரக ரோபோட்டுகள் நடமாடின. இது புதிய உலகசாதனையாக பதிவு செய்யப்பட்டது.

வணிகம்

மாநிலங்களுக்கு இடையே பொருள் பரிமாற்றத்துக்கான இவேபில் முறை அமலுக்குவந்தது

 • மாநிலங்களுக்கு இடையேயான பொருள் பரிமாற்றத்துக்கு இணைய வழியில்ர சீதுகளை உருவாக்கும் இ-வேபில் முறை நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது. ரூ.50,000-க்கும் அதிகமான விலையுள்ள பொருட்களை ஒருமாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு எடுத்துச்செல்லும் போது வர்த்தகர்களும், பொருட்களை எடுத்துச் செல்பவர்களும் இந்த இ-வே பில்லைஉ ருவாக்க வேண்டும். வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்துவதற்காக சரக்கு மற்றும் சேவைவரி அமைப்பு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மார்ச் 30 மற்றும் 31 தேதிகளில் பெரும்பாலும் ஒப்பந்தங்களை வர்த்தகர்கள் பெற்றிருப்பதால் முதல்நாளான நேற்று இ-வேபில்கள் அதிகஅளவில் உருவாக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

விளையாட்டு

2011  உலகக்கப்பை வென்ற இதேநாளில் தோனிக்கு பத்மபூஷண் விருது: ரசிகர்கள்நெகிழ்ச்சி

 • 2011 உலகக்கோப்பையை தோனி படை வென்ற நாளில் மகேந்திர சிங் தோனிக்கு இன்று பத்மபூஷண் விருது அளித்து கவுரப்படுத்தியுள்ளனர்.இது தற்செயலா அல்லது திட்டமிட்டு அவ்வாறு வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆம். இன்று ஏப்ரல் 2-ம் தேதி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல் இதே நாளில் தோனி, நுவன் குலசேகராவை சிக்ஸ் அடித்து கோப்பையை வெல்ல பங்களிப்பு செய்தார்.

டிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென்ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலயஇலக்கு

 • ஜொஹான்னஸ்பர்க் டெஸ்ட்போட்டியின் 4-ம் நாளில் தென்ஆப்பிரிக்க அணி தன் 2வதுஇன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம்ஆஸ்திரேலிய அணிக்கு 612 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

இளையோர் ஆசிய சாம்பியன்ஷிப் செஸ்ம்ருதுல் தெஹன்கர் தங்கம் வென்றார்

 • தாய்லாந்தில் நடைபெற்றுவரும் இளையோர் ஆசிய சாம்பியன்ஷிப் செஸ்ஸில் ம்ருதுல் தெஹன்கர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

PDF Download

ஏப்ரல் 1 நடப்பு நிகழ்வுகள்

மாநிலசெய்திகள்

தமிழ்நாடு

காவிரி விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்புவழக்கு

 • காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தில் பிப்ரவரி16 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசுக்கு எதிராக, உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசின் சார்பில்அ வமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு மூன்று மாதங்கள் கால அவகாசம் கேட்டுள்ளது.

புதுதில்லி:

புதுதில்லியில் ஏப்ரல் 1 முதல் யூரோ 6 பெட்ரோல் டீசல் அறிமுகம்

 • புதுதில்லியில் காற்று மாசுபடுதலை தவிர்க்க ஏப்ரல் 1 முதல் யூரோ 6 பெட்ரோல் டீசல் அறிமுகமாக உள்ளது. யூரோ 4லிருந்து நேரடியாக யூரோ 6 வகைக்கு மாறும் முதல் இடம் இந்தியாவிலேயே தில்லி ஆகும்.இந்த திட்டம் ஏப்ரல் 2020லிருந்து இந்தியா முழுவதும் வ ரஉள்ளது.

ராஜஸ்தான்:

ராஜஸ்தானில்ஏப்ரல் 1 இல் மாபெரும் உணவு பூங்கா தொடங்கப்பட்டது

 • மத்திய உணவுபதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் திருமதி ஹர்சிம்ரம்ட்கவுர் க்ரீண்டெக் மெகாபுட்பார்க் என்னும் மாபெரும் உணவு பூங்காவை ராஜஸ்தான் அஜ்மீர் இல் தொடங்கிவைத்தார். இதுவிவசாயிகள் லாபம் அடைவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆந்திரபிரதேசம்:

ஆந்திராவில் கலம்காரி அருங்காட்சியகம்

 • முன்னாள் மத்திய ஜவுளிதுறை அமைச்சர் ஆந்திராவில் கலம்காரி கலைஅருங்காட்சியகத்தைத் தொடங்கிவைத்தார். இந்த கலை பெத்தண்ணா என்னும் இடத்தில் 1970 லிருந்து வளர்ந்து வருகிறது.

தேசியசெய்திகள்

அருணாச்சல் எல்லையில் உள்ள டோக்லாம் எல்லையில் படைகள் குவிப்பு

 • சீனாவின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, அருணாச்சலபிரதேச எல்லையில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை இந்தியா அதிகரித்துள்ளது.அருணாச்சல் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் மீண்டும் பதற்றத்தை தடுக்க அப்பகுதியில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை இந்தியா அதிகரித்தது.

கோனார்க் சூரியக் கோயிலில் உலகத்தரம் வாய்ந்த விளக்க மையம் மற்றும் சுற்றுலா வசதிகளை பெட்ரோலியத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

 • மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு, திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஒடிஷாவில் உத்கல் தின கொண்டாட்டத்தையொட்டி, கோனார்க்கில் உள்ள சூரியக் கோயிலில் உலகத்தரம் வாய்ந்த விளக்க மையம் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை தொடங்கிவைத்தார். ஒடிஷா மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் திகழும் கோனார்க் சூரியக் கோயிலின் கட்டடக் கலையின் அற்புதத்தை  உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டியது அவசியம், இதற்காகவே விளக்க மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

சர்வதேசசெய்திகள்

வடகொரியா டோக்யோ மற்றும் பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும்.

 • வடகொரியா 2020 மற்றும் 2022 இல் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் என்று சர்வேதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தெரிவித்தார்.

மலாலா 5 ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானில் சொந்த வீட்டுக்குச்சென்றார்

 • அமைதிக்கு நோபல் பரிசு பெற்ற மலாலா 5 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய சொந்த தேசத்துக்கு வந்தார். தலிபான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டப் பிறகு அவர் தனது சொந்த நாட்டிற்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.

விஞ்ஞானசெய்திகள்

ஜிசாட்-6ஏ செயற்கைக் கோள் தகவல் தொடர்பைஇழந்தது:இஸ்ரோ

 • ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த மார்ச் 29 அன்று, ஜிஎஸ்எல்விஎஃப் 8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6 ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள் தகவல் தொடர்பை இழந்தது என்று இந்தியவிண்வெளி ஆய்வுமையம்(இஸ்ரோ) அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இஸ்ரோ செயற்கைகோளுடன் மீண்டும் தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறது என்று தெரிவித்துள்ளது..இந்த ஜிசாட் 6 ஏ செயற்கைக்கோளின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள் ஆகும்.

வணிகசெய்திகள்

அமெரிக்காவிலிருந்து எல் என் ஜி இறக்குமதி

 • அமெரிக்காவிலிருந்து திரவ இயற்கைஎரிவாயு (எல்என்ஜி) நிரப்பப்பட்ட கப்பல் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவது இது முதல் முறையாகும்.அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள செனயர் எனர்ஜி சபைன்பாஸ் ஆலையிலிருந்து திரவ இயற்கைஎரிவாயுவை வாங்குவதற்கு கெயில் ஒப்பந்தம்செய்தது.
 • முதலாவது கப்பல் எம்விமெரிடியன் 25 நாள் பயணத்துக்குப் பிறகு மகாராஷ்டிரமாநிலம் தபோல் மின்னுற்பத்தி நிலையத்துக்கு வந்தது. தபோலில் உள்ள மின்னுற்பத்தி ஆலைக்கு இந்த எல்என்ஜி பயன்படுத்தப்படும். திரவஎரிபொருளில் இயங்கும் மிகப்பெரிய மின்னுற்பத்தி ஆலை இதுவாகும்.

விளையாட்டுசெய்திகள்

டி20 கிரிக்கெட் தொடரில்ஆஸ்திரேலியா மகளிர் சாம்பியன்

 • டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நடைபெற்று வந்தது. இதில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இதில் ஆஸ்திரேலியா 57 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

PDF Download

TANCET வினாத்தாட்கள்

TANCET வினாத்தாட்கள்

பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் . . . 

PART – IEngineering Mathematics
PART – IIBasic Engineering And Sciences
PART – III Group A
Group B

 

 

ஏப்ரல் 5 – நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்

 • சென்னை – மதுரை இடையே இரட்டை பாதை பணி நிறைவடைந்துள்ளதால், தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்.
 • தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு விரைவில் பகல் நேர ரயில் ஒன்று இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்ஷிரேஸ்தா தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு 

 • பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைகிறது.
 • இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது.

கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

 • தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 9-ம் தேதி முதல் ஜூன் 27-ம் தேதி வரையில் வாரம் இருமுறை (திங்கள், புதன்கிழமைகளில்) சிறப்பு ரயில்கள் கொல்லத்துக்கு இயக்கப்படும்.
 • இதேபோல், கொல்லத்தில் இருந்து ஏப்ரல் 10-ம் தேதி முதல் ஜூன் 28-ம் தேதி வரையில் (செவ்வாய், வியாழன்களில்) தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

 ஐஓபி வட்டி விகிதம் குறைப்பு

 • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.

இந்தியா

மத்திய வேளாண் துறை அமைச்சர் தகவல்

 • பொது விநியோகத் திட்டத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு உட்பட சிறுதானியங்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

ரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை 

 • கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தின் பைராபுராவில் இருந்து 62 அடி உயரம் உள்ள‌ பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சிலையை,பெங்களூருவுக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கின.

உலகம்

8.7 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் 

 • இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு, ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து 8.7 கோடி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் முறையற்ற வகையில் பகிரப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வணிகம்

ஆம்பி தலைவர் தகவல்

 • 2017 ஆண்டில் புதிதாக 32 லட்சம் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்திருக்கிறார்கள் என இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கங்களின் தலைவர் (ஆம்பி) ஏ.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

`3 நாட்களில் 17 லட்சம் இ-வே பில் உருவாக்கம்’

 • ஏப்ரல் 1-ம் தேதி முதல் சரக்கு மின் வழி ரசீது (இ-வே பில்) முறை அமல்படுத்தப்பட்டது.
 • கடந்த மூன்று நாட்களில் 17 லட்சம் இ-வே பில்கள் உருவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

விளையாட்டு

21-வது காமன்வெல்த் போட்டி

 • ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள்  பிரிவில் இந்தியாவின் மீரா பாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.

ஸ்டார் இந்தியா

 • இந்திய கிரிக்கெட்டின் உலகம் முழுதுக்குற்மான ஒளிபரப்பு, டிஜிட்டல் உரிமைகளை ரூ.6138 கோடிக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.
 • 2018-2023 வரைக்குமான ஒப்பந்தமாகும் இது.

PDF Download