பத்ம விருதுகள் 2020

0
பத்ம விருதுகள் 2020
பத்ம விருதுகள் 2020

பத்ம விருதுகள் 2020

இந்திய அரசு 1954ஆம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அதுதான் இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது. அதற்கு அடுத்த நிலையிலான விருதுகள் பத்ம விபூசண், பத்ம பூசண், பத்மஸ்ரீ ஆகியவை. இவற்றை பத்ம விருதுகள் என்று சொல்வது வழக்கம். இவை குடிமுறை சார்ந்தவர்களுக்கான விருதுகள். அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

பத்ம விருதுகள்..!

குடியரசு தினவிழாவை முன்னிட்டு பல தலைவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவின் 2-வது மிகப்பெரும் கவுரவ விருதான பத்ம விபூஷன் விருதுகள் முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு மறைவுக்கு பின்னர் வழங்கப்படுகின்றன. 7 பத்ம விபூஷன், 16 பத்ம பூஷன், 118 பத்ம ஸ்ரீ விருதுகள் இந்தாண்டு வழங்கப்படவுள்ளது. அவர்களில் 34 பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம பூசன் விருது பெறுபவர்கள்

உயர்மட்ட அளவில் சிறப்பான சேவை செய்தமைக்காக பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது. பேட்மின்ட்டன் வீராங்கனை பி.வி..சிந்து, தொழில் அதிபர்கள் ஆனந்த் மகேந்திரா, வேனு ஸ்ரீனிவாசன், முன்னாள் நாகலாந்து முதல்வர் எஸ்.சி. ஜமீர், ஜம்மு காஷ்மீர் அரசியல்வாதி முசாபர் உசைன் பேக் ஆகியோர் இந்த ஆண்டு பெறுகின்றனர்.

பத்ம விபூஷண் விருது பெறுபவர்கள்

தன்னிகரற்ற சிறப்பான சேவையை நாட்டுக்கு வழங்கியமைக்காக பத்ம விபூஷன் விருது வழங்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மேரி கோம், பிரபல பாடகர் சன்னுலால் மிஷ்ரா, மொரீஷியஸ் பிரதமர் அனிரூத் குகநாத் ஆகியோர் இந்த ஆண்டு பெறுகின்றனர்.

பத்ம ஸ்ரீ விருது பெறுபவர்கள்

தங்களது துறைகளில் சிறப்பானை சேவை வழங்கியதற்காக பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. பின்னணி பாடகர் சுரேஷ் வட்கார், யக்குனர் கரன் ஜோகர், நடிகை கங்கனா ரணாவத், Naukri.com நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தானி, தொழில் அதிபர் பாரத் கோயங்கா, தொழில்நுட்ப வல்லுனர் நேம்நாத் ஜெய்ன் ஆகியோர் இந்த ஆண்டு பெறுகின்றனர்.

Download Padma Awrads 2020 List
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!