விஜய் டிவி “பாவம் கணேசன்” சீரியலில் இருந்து விலகிய நடிகை விஷாலினி – ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாவம் கணேசன்" சீரியலில் இருந்து விலகிய நடிகை விஷாலினி - ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!
விஜய் டிவி “பாவம் கணேசன்” சீரியலில் இருந்து விலகிய நடிகை விஷாலினி – ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

விஜய் டிவி சீரியல்கள் பல குடும்ப கருத்துக்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் முன்னணியில் இருக்கும் “பாவம் கணேசன்” சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஒருவர் தற்போது விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாவம் கணேசன் சீரியல்

தமிழ் சின்னத்திரை சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில், பல புதிய கன்டென்ட் உடன் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியல்களை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றன. பல சீரியல்கள் குடும்பக் கதையை மையமாக வைத்தே ஒளிபரப்பாகி வருவதால் அந்த சீரியல்கள் அனைத்துமே வெற்றி பெறுகின்றனர். அந்த வகையில் நடிகர் நவீன் கதாநாயகனாக நடிக்கும் சீரியல் தான் “பாவம் கணேசன்”. இந்த சீரியல் அப்பா இல்லாத குடும்பத்தில் இருக்கும் மகனின் பொறுப்புகளை பற்றிய கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து விலகும் அருண் பிரசாத் – அவருக்கு பதிலாக களமிறங்கும் பிரபல நடிகர்!

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான நவீன் தான் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். சாதாரண குடும்ப கதைக்களம் கொண்ட இந்த சீரியலில் நவீனுக்கு ஜோடியாக குணவதி என்ற கேரக்டரில் நேகா கவுடா நடித்து வருகிறார். இவர்கள் இருவரின் நடிப்பும் இளம் வயதினருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. எனவே இவ்வளவு பெரிய குடும்பத்தை கணேசன் தான் தனது உழைப்பு மூலம் காப்பாற்றி வருகிறார்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் கணேசனின் அக்கா கதாபாத்திரத்தில் நடிகை விஷாலினி நடித்து வந்தார். தற்போது இவர் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவருக்கு பதிலாக பல சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற லதா ராவ் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். லதா சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து இடைவெளி எடுத்து இருந்தார். இந்நிலையில் தற்போது இந்த சீரியல் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார் அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!