
‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக கலந்து கொள்ளும் ஓவியா – ரசிகர்கள் உற்சாகம்!
டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் தற்போது மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் அடுத்ததாக வைல்ட் கார்டு எண்ட்ரியாக வர இருக்கும் பிரபலம் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைல்ட் கார்டு என்ட்ரி
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது, பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தற்போது ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற பெயரில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முந்தைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் தான் பங்கேற்று வருகின்றனர். அபிராமி, வனிதா விஜயகுமார், பாலாஜி, தாடி பாலாஜி, சுரேஷ், ஜூலி, சுருதி, நிரூப், அபிநய், சுஜா வருணி உள்ளிட்ட 14 போட்டியாளர்கள விளையாடி வருகின்றனர். கடந்த ஜனவரி 31ம் தேதி முதல் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
‘குக் வித் கோமாளி’ இல் என்ட்ரி கொடுத்த புகழை எட்டி உதைத்த வெங்கடேஷ் பட் – ரசிகர்கள் அதிர்ச்சி!
இதில் பங்கேற்றுள்ள அனைத்து போட்டியாளர்களும் சற்று விவகாரமான ஆட்கள் என்று தான் கூற வேண்டும். மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பினையும் பெற்று வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை விட பிக் பாஸ் அல்டிமேட் ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். நேற்று வழக்கம் போலவே அனைத்து போட்டியாளர்களுக்கும் டாஸ்குகள் கொடுக்கப்பட்டது. காரசாரமான விவாதங்களுடன் அனைத்து போட்டியாளர்களும் சண்டை போட்டு கொண்டனர். இதனால் நிகழ்ச்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து மீண்டும் விலகிய முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!
தற்போது அடுத்த கட்டமாக வைல்ட் கார்டு என்ட்ரியாக எந்த பிரபலம் நுழைய இருக்கிறார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. அது குறித்த தகவல் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, நடிகை ஓவியா தான் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் தனக்கு என்று ஒரு ஆர்மியையே உருவாக்கி பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ஓவியா. அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இன்னும் நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று தான் கூற வேண்டும்.