பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய ஓவியா – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய ஓவியா - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய ஓவியா - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய ஓவியா – ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய பரிமாற்றமான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நாளை (ஜன.30) முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் அதில் முக்கிய போட்டியாளர் ஒருவர் கடைசி நேரத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனதாக தகவல் வெளியாகி இருக்கிறது

பிக்பாஸ் அல்டிமேட்:

பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் வெற்றிகண்ட ஒரு ரியாலிட்டி ஷோ ஆகும். இந்த நிகழ்ச்சி தமிழில் விஜய் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் ஐந்தாவது சீசன் முடிவுக்கு வந்தது. அதில் நடிகர் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டு ரூ.50 லட்சத்தை பெற்றார். இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி தொடங்க இருப்பதாகவும் அதில் ஏற்கனவே நடந்து முடிந்த சீசன்களில் கலந்து கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் எனவும் இந்த நிகழ்ச்சி நாளை (ஜன. 30) முதல் ஓடிடி தலத்தில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் தினமும் போட்டியாளர்கள் யார் வர இருக்கிறார்கள் என்பது குறித்த ப்ரோமோ வெளியானது. இதுவரை சினேகன், வனிதா, ஜூலி, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி ஆகியோர் வர இருப்பதாக அதிகாரபூர்வமாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மேலும் சில மக்கள் மனம் கவர்ந்த போட்டியாளர்கள் வருவது குறித்து தகவல் வெளியானது.

கோபியால் மாடியில் இருந்து விழுந்து பேச முடியாமல் போன தாத்தா, வருத்தத்தில் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அதில் முதல் சீசனில் மக்களின் பேராதரவை பெற்ற நடிகை ஓவியா வர இருக்கிறார் என தகவல் வெளியானது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்த நிலையில், தற்போது ஓவியாவுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனதால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் ஆர்மிக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது. இருந்தாலும் இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்பதால் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here