ஏப்ரல் 26 முதல் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தம் – ஜிப்மர் அறிவிப்பு!!

0
ஏப்ரல் 26 முதல் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தம் - ஜிப்மர் அறிவிப்பு!!
ஏப்ரல் 26 முதல் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தம் - ஜிப்மர் அறிவிப்பு!!
ஏப்ரல் 26 முதல் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தம் – ஜிப்மர் அறிவிப்பு!!

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை நிறுத்தம்:

புதுச்சேரியில் கொரோனா தொற்று முன்பை காட்டிலும் சற்று வேகமெடுத்து வருகிறது. அங்கு நேற்று மட்டும் 984 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 50 ஆயிரமாக உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு, தவிர வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

உணவகங்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், தியேட்டர்கள் போன்றவற்றிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை சார்பில் தெரிவிக்கையில், ‘மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

பிளாஸ்டிக் தொழில்நுட்ப படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை – சிப்பெட் நிறுவனத்தில் துவக்கம்!!

இதனால் வெளிப்புற நோயாளிகள் கொரோனா பரவலால் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில், அவர்களது சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு உள் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அவசர சிகிச்சை தவிர பிற சிகிச்சை அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here