TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? OTR ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதற்கான எளிய வழிமுறைகள்!

0
TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? OTR ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதற்கான எளிய வழிமுறைகள்!
TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? OTR ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதற்கான எளிய வழிமுறைகள்!
TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? OTR ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதற்கான எளிய வழிமுறைகள்!

தமிழக அரசுப் பணிக்குத் தகுதியானவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்தெடுத்து வருகின்றது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு குரூப் 2,குரூப் 2 ஏ தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. மேலும் குரூப் 2,குரூப் 2 ஏ தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

எளிய வழிமுறைகள்:

TNPSC மூலம் பல்வேறு வகையான போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் TNPSC குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. அதற்கான அறிவிப்பை சென்னை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் நாளை பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடுவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் குரூப் 2 ஏ-வில் மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

தமிழகத்தில் மீண்டும் LKG, UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? தொடக்க கல்வி இயக்குநரகம் விளக்கம்!

இந்த குரூப் 2,குரூப் 2 ஏ தேர்வு காலிப்பணியிடங்கள், முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளின் கீழ் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் TNPSC நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் எனப்படும் ஒருமுறைப் பதிவு கட்டாயமாகும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன், OTR பதிவு செய்வது அவசியம் ஆகும்,

1.TNPSC login id மற்றும் Password-ஐ உருவாக்க வேண்டும்.

2. ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன்( OTR) படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

3. ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேசனுக்கான கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

4 பின்பு ஸ்கேன் செய்யப்பட்ட போட்டோ, கையெழுத்து பிரதியை பதிவேற்றவும்

5. தொடர்ந்து submit பட்டனை அழுத்த வேண்டும்.

6. பதிவு முடிவடைந்தவுடன், உங்கள் மொபைல் எண்ணிற்கு யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு வரும். அதனைக்கொண்டு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்ட ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன், பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!