TNPSC தேர்வெழுத தயாராகும் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு – பிப்ரவரி 28 கடைசி நாள்!

0
TNPSC தேர்வெழுத தயாராகும் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு - பிப்ரவரி 28 கடைசி நாள்!
TNPSC தேர்வெழுத தயாராகும் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு - பிப்ரவரி 28 கடைசி நாள்!
TNPSC தேர்வெழுத தயாராகும் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு – பிப்ரவரி 28 கடைசி நாள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமீப காலமாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் One Time Registration கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வரும் 28ஆம் தேதிக்குள் இணைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். மேலும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 3, குரூப் 4 என பல்வேறு வகைகளில் போட்டி தேர்வுகளை TNPSC நடத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனா காலகட்டத்தில் அரசு சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளி வராமல் இருந்தது. இருப்பினும் தற்போது தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

தமிழகத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் வேலை – பிப்.22 கடைசி நாள்! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

இந்த நிலையில் வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. இந்த மாதம் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மற்றும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என TNPSC தெரிவித்துள்ளது. இந்த வகையில் TNPSC தேர்வுக்கான புதிய பாடத்திட்டமும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போட்டி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ளார்.

பெண் குழந்தைகள் வைத்திருப்போருக்கு ஜாக்பாட் – Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம்! முழு விபரம் இதோ!

TNPSC இணையதளத்தில் ஒரு முறை நிரந்தரப் பதிவு (One Time Registration) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வாளர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை 28.02.2022 ஆம் தேதிக்குள் தவறாமல் இணைக்க வேண்டும். இதன் மூலம் TNPSC யால் வெளியிடப்படும் அறிவிக்கைகளின் அடிப்படையில் தனது ஒருமுறை நிரந்தரப் பதிவு (OTR) கணக்கு மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.மேலும் இது குறித்து கூடுதல் விவரம் அறிய 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி அல்லது [email protected] /[email protected] என்றமின்னஞ்சல் மூலமாக அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!