தீபாவளி சலுகை: குழந்தைகளுக்கு ஆர்கானிக் ஆடைகள், தமிழ்த் தறி தொகுப்பு – முதல்வர் அறிவிப்பு!

0
தீபாவளி சலுகை: குழந்தைகளுக்கு ஆர்கானிக் ஆடைகள், தமிழ்த் தறி தொகுப்பு - முதல்வர் அறிவிப்பு!
தீபாவளி சலுகை: குழந்தைகளுக்கு ஆர்கானிக் ஆடைகள், தமிழ்த் தறி தொகுப்பு - முதல்வர் அறிவிப்பு!
தீபாவளி சலுகை: குழந்தைகளுக்கு ஆர்கானிக் ஆடைகள், தமிழ்த் தறி தொகுப்பு – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளுக்கான ஆர்கானிக் ஆடைகள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தமிழ்த் தறி தொகுப்பு ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.

கைத்தறி ஆடைகள்:

தமிழகத்தில் மக்களின் நலன் கருதி திமுக கட்சி தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு சிறப்பான திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கிறது. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் புதுமையான ஆடைகள் தயாரிப்பின் தமிழ்த்தறி தொகுப்பு இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குழந்தைகளுக்கு முழுமையாக பருத்தியில் தயாரிக்கப்பட்ட மென்மையான ஆர்கானிக் ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி நம் நாட்டின் கலாச்சாரம், பண்பாடுகளின் வெளிப்பாடாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு என்று பல்வேறு விதமான புதிய சேலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பட்டுகள் என்றாலே நினைவுக்கு வருவது காஞ்சிபுரம், ஆரணி, பனாரஸ் மற்றும் ஒரு சில ஊர்களுக்கென்றும் சிறந்த சேலைகள் உள்ளன.

மதுரையில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் – நாளை நடைபெறும்!

அவ்வாறு உள்ள சேலைகள் பல்வேறு வடிவமைப்பில் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் 100, ஆரணி, திருபுவனம் 50, சேலம் மற்றும் கோயம்புத்தூர் பட்டுகள் 200, சின்னாளப்பட்டி பட்டு மற்றும் பருத்தி சேலைகள் 75, நெகமம் பருத்தி சேலைகள் 40, திண்டுக்கல் மற்றும் பரமக்குடி பருத்தி சேலைகள் 80, லினன் சேலைகள் 25 என ஒவ்வொரு வகை சேலைகளும் புதிய வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளன. பெண்களோடு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பல்வேறு ஆடைகளில் புதிய வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்களுக்கு கைலிகள் 75 புதிய வடிவமைப்புகளிலும், பவானி கோர்வை ஜமுக்காளம் 30 புதிய வடிவமைப்புகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து குழந்தைகளுக்கு காஞ்சிபுரம் பட்டுப்பாவாடை மற்றும் சட்டை 50 புதிய வடிவமைப்புகளில் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு – அதிர்ச்சியில் அரசாங்கம்!

இவை அனைத்தும் அடங்கிய தமிழ்த்தறி தொகுப்பினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் பட்டு சேலைகளில் உள்ள சரிகைகளில் தங்கம் மற்றும் வெள்ளி அளவீடுகள் மற்றும் நம்பகத்தன்மையினை உறுதி செய்யும் விதமாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் உத்தரவாத அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண்களை கவரும் விதமாக பல்வேறு பிரிண்டட் சேலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த தீபாவளி வெகு விமர்சையாக மற்றும் வண்ணமயமாக கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here