தமிழகத்தில் பிப்.15ம் தேதிக்குள் காப்பீடு செய்ய உத்தரவு – நெல் தரிசில் பயறு சாகுபடி!

0
தமிழகத்தில் பிப்.15ம் தேதிக்குள் காப்பீடு செய்ய உத்தரவு - நெல் தரிசில் பயறு சாகுபடி!
தமிழகத்தில் பிப்.15ம் தேதிக்குள் காப்பீடு செய்ய உத்தரவு - நெல் தரிசில் பயறு சாகுபடி!
தமிழகத்தில் பிப்.15ம் தேதிக்குள் காப்பீடு செய்ய உத்தரவு – நெல் தரிசில் பயறு சாகுபடி!

தமிழகத்தில் 2021- 2022 ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள், பிப்ரவரி 15ம் தேதிக்குள் நெல் தரிசில் பயறு வகைகளை காப்பீடு செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காப்பீடு செய்ய உத்தரவு :

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருவர் காரீஃப் பயிர்களுக்கு 2 சதவிகித ப்ரீமியத்தையும், ராபி பயிர்களுக்கு 1.5% ப்ரீமியத்தையும் செலுத்த வேண்டும். இந்த வகையில் கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை காரணமாக, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த டிசம்பர் மாத இறுதியில் விவசாயிகள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் வழியாக நெல் பயிரை காப்பீடு செய்தனர்.

தமிழக ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு – 3,803 காலிப்பணியிடங்கள்!

இந்த வகையில் 2021- 2022 ம் ஆண்டுக்கான, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் சென்னை மாநகராட்சி இல்லாமல், மற்ற அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது குளிர் கால பருவ (ராபி) பயிர்களான நவரை மற்றும் கோடை நெல், நெல் தரிசில் உளுந்து, நெல் தரிசில் பச்சை பயிறு, நெல் தரிசில் பருத்தி, எள், நிலக்கடலை, மக்காச்சோளம், ஆகிய பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இந்த வருடம் நெல் தரிசில் பயறு வகைகளை காப்பீடு செய்ய தமிழக அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த செய்தி குறிப்பில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிப்.15 ஆம் தேதிக்குள் நெல் தரிசில் பயறு வகைகளை காப்பீடு செய்ய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!

இதில், டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் நெல் தரிசில் பயிறு வகைகளை விவசாயிகள் காப்பீடு செய்து வருகின்றனர். நெல் தரிசில் பயிறு வகைகளை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 15 ஆம் தேதி அன்று முடிவடைய உள்ளது. இந்த நிலையில் அரசு நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு பின்னர் இப்பயிர்களை சாகுபடி செய்ய உத்தேசிக்கும் விவசாயிகள் திட்ட விதிமுறைகளின்படி கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கலுக்கு பதிலாக “விதைப்பு சான்றிதழ்” பெற வேண்டும். மேலும் இந்த சான்றிதழை வைத்து பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் பயிர்களை காப்பீடு செய்து பயனடையுமாறு விவசாயிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கேட்டுக் கொள்கிறது என செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here