திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் பக்தர்களுக்கு தடை!

0
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் பக்தர்களுக்கு தடை!
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் பக்தர்களுக்கு தடை!
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் பக்தர்களுக்கு தடை!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மலைக்கோட்டையில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை பக்தர்கள் தரிசிக்க அனுமதி இல்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உச்சிப்பிள்ளையார் கோயில்:

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மாநில வாரியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலா தலங்கள், திருவிழாக்கள் முதலியவற்றிற்கு பொதுமக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

ICC Men’s T20 World Cup 2021 – 15 வீரர்கள் கொண்ட வங்கதேச அணி அறிவிப்பு!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலை வைக்க மற்றும் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளில் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் திருச்சி மலைக்கோட்டையில் உச்சிப்பிள்ளையார் கோயில் மாணிக்க விநாயகருக்கு 30 கிலோ, உச்சி பிள்ளையாருக்கு 30 கிலோ என 60 கிலோ கொழுக்கட்டை படைத்து வழிபடுவது வழக்கமான ஒன்று.

இன்று முதல் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள் மாற்றம் – வங்கியின் முக்கிய அறிவிப்பு!

கொரோனா காலம் என்பதால் பாதுகாப்பு நெறிமுறையின் அடிப்படையில் திருச்சி மலைக்கோட்டையில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை பக்தர்கள் தரிசிக்க அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து குறைந்த அளவிலான கொழுக்கட்டை விநாயகருக்கு படைக்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளின்படி நாளை தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!