வீட்டுலயே இருங்க மக்களே! கனமழை எதிரொலி.. மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

0
வீட்டுலயே இருங்க மக்களே! கனமழை எதிரொலி.. மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வீட்டுலயே இருங்க மக்களே! கனமழை எதிரொலி.. மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வீட்டுலயே இருங்க மக்களே! கனமழை எதிரொலி.. மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

நாடு முழுவதும் தற்போது கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் மாநில வாரியாக வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வானிலை அறிக்கை:

அடுத்த சில நாட்களுக்கு இந்தியாவின் சில பகுதிகளில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை பொழிவினால் ஏரளாமானோர் உயிரிழந்துள்ளனர், மேலும் 1.35 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், இன்றைய நிலவரத்தின் படி மாநில வாரியாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி:

டெல்லியில் திங்கள்கிழமை ஓரளவு மேகமூட்டமான வானிலை காணப்படும். நகரில் கடந்த வாரம் தொடர் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா:

மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் திங்கள்கிழமை லேசான மழை பெய்யக்கூடும். இருப்பினும், பர்பானி, ஹிங்கோலி, நாந்தேட் மற்றும் லத்தூர் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
இமாச்சலப் பிரதேசம்:

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா, காங்க்ரா, உனா, பிலாஸ்பூர், சோலன், சிம்லா, சிர்மவுர் மற்றும் கின்னவுர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

உத்தரகாண்ட்:

உத்தரகாண்டின் சாமோலி, பவுரி கர்வால், அல்மோரா, நைனிடால், பித்தோராகர் மற்றும் பாகேஷ்வர் ஆகிய பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா:

இரு மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. செய்திகளின் படி, பஞ்சாபில் இடைவிடாது பெய்த மழையால் சுமார் 1.35 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல பகுதிகளில், முக்கிய பயிரான நெல் அறுவடைக்கு தயாராக உள்ள நேரத்தில் மழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க Jio பயனரா? அப்போ உங்களுக்கு தான் இந்த அசத்தல் Plans – இது தெரியலனா இழப்பு உங்களுக்கு தான்!

தமிழ்நாடு:

தமிழகத்திலும் கடந்த வாரம் முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இனி வரும் நாட்களிலும் கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!