கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணைக்கு எதிர்ப்பு – தமிழக முதல்வர் கடிதம்!

0
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணைக்கு எதிர்ப்பு - தமிழக முதல்வர் கடிதம்!
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணைக்கு எதிர்ப்பு – தமிழக முதல்வர் கடிதம்!

ஆந்திர மாநிலத்தில்‌ கொசஸ்தலை ஆற்றின்‌ குறுக்கே அணைகளை கட்டுவதற்காக ஆந்திர அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்‌ சென்னை மற்றும்‌ அதனை சுற்றியுள்ள பகுதிகளின்‌ குடிநீர்‌ வழங்கலைப்‌ பாதிக்கும்‌ என்பதை கருத்தில்‌ கொண்டு, இவ்வாறு அணைகள்‌ கட்டும்‌. முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக்‌ கைவிட வேண்டும்‌ என்று ஆந்திர முதல்வருக்கு, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி உள்ளார்.

முதல்வர் கடிதம்:

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள முக்களகண்டிகை மற்றும் கதரப்பள்ளி கிராமங்களுக்கு அருகில் கொசஸ்தலையாற்றின் குறுக்கே இரண்டு அணைகளை கட்ட அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீருக்காக ஆற்றின் நீரோட்டத்தை நம்பி வாழும் மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கொசஸ்தலையாறு ஆற்றுப்படுகை மற்றும் கொசஸ்தலையாறு ஆகிய இரண்டும் மாநிலங்களுக்கு இடையே அமைந்துள்ளது. ஆற்றுப் படுகையின் மொத்தப் பரப்பளவு 3727 சதுர கி.மீ. இதில் 877 சதுர கி.மீ. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது மற்றும் 2850 சதுர கி.மீ. தமிழ்நாட்டில் உள்ளது. சென்னை மாநகரப் பகுதியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கொசஸ்தலியாற்றின் குறுக்கே பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. ஆற்றின் குறுக்கே இதுபோன்ற புதிய நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டால், அதன் துணை ஆறுகள் அல்லது துணை நதிகள் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரும் நீர்வரத்தை பாதிக்கும்.

இதனால் சென்னை நகருக்கு குடிநீர் வினியோகம் மற்றும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் கொசஸ்தலையாற்றின் குறுக்கே எந்த ஒரு புதிய கட்டுமானத்தையும் திட்டமிடவோ, ஒப்புதல் அளிக்கவோ முடியாது. எனவே, இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. எனவே, மேற்குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என்றும், ஆந்திராவில் உள்ள கொசஸ்தலையாறு ஆற்றுப்படுகை பகுதியில் எந்த புதிய திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக ESIC நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download

மேலும் தமிழ்நாடு அரசினை கலந்தாலோசிக்காமல்‌ எந்தவொரு திட்டத்தையும்‌ செயல்படுத்த கூடாது என்றும்‌ வலியுறுத்தி, ஆந்திர முதலமைச்சர்‌ ஜெகன்‌ மோகண்‌ ரெட்டி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்களின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!