அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக கிளம்பும் எதிர்ப்பு – மத்திய அரசு முடிவு என்ன?

0
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக கிளம்பும் எதிர்ப்பு - மத்திய அரசு முடிவு என்ன?
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக கிளம்பும் எதிர்ப்பு - மத்திய அரசு முடிவு என்ன?
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக கிளம்பும் எதிர்ப்பு – மத்திய அரசு முடிவு என்ன?

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

கேவியட் மனு தாக்கல்:

அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் முதல் வாரத்தில் முதல் கட்டமாக 25 ஆயிரம் அக்னி வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அக்னி வீரர்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக உயரும் என்றும் லெப்டினண்ட் ஜெனரல் பன்சி போனப்பா கூறியுள்ளார். முதல் கடற்படை ‘அக்னிவீரர்கள்’ குழு இந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி முதல், ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சில்கா பயிற்சி மையத்தில் பயிற்சி பெறத் தொடங்குவார்கள் என துணை அட்மிரல் தினேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

இந்த குழுவில் ஆண் மற்றும் பெண் அக்னி வீரர்கள் இடம் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் விமானப்படையில் அக்னி வீரர்களுக்கான பதிவு ஜூன் 24 முதல் ஜூலை 24 வரை நடைபெறும் என்றும், முதற்கட்டமாக ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்றும் ஏர் மார்ஷல் எஸ் கே ஜா தெரிவித்துள்ளார். டிசம்பரில் 30 ஆம் தேதியில் இருந்து முதல் தொகுப்பு வீரர்கள் பயிற்சியைத் தொடங்குவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், அக்னி பாதை திட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘அக்னிபாதை திட்டம் என்பது சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பு ரீதியாக தவறான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தலைநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு – போராட்ட எதிரொலி! அரசு முடிவு!

அதனால் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என கூறியுள்ளார். இதையடுத்து இந்த மனு தலைமை நீதிபதியின் பரிந்துரையின் படி விரைவில் பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அக்னி பாதை திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக்குழு அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டுமென ரிட் மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் ஒன்றிய அரசின் கருத்தைக் கேட்காமல் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here