‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபியை நடுரோட்டில் திட்டிய ரசிகைகள் – பாக்கியாவிற்கு பெருகும் ஆதரவு!

0
'பாக்கியலட்சுமி' சீரியல் கோபியை நடுரோட்டில் திட்டிய ரசிகைகள் - பாக்கியாவிற்கு பெருகும் ஆதரவு!
'பாக்கியலட்சுமி' சீரியல் கோபியை நடுரோட்டில் திட்டிய ரசிகைகள் - பாக்கியாவிற்கு பெருகும் ஆதரவு!
‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபியை நடுரோட்டில் திட்டிய ரசிகைகள் – பாக்கியாவிற்கு பெருகும் ஆதரவு!

பாக்கியலட்சுமி சீரியலில் தனது மனைவியை விட்டு விட்டு மற்றொரு பெண்னை திருமணம் செய்து கொள்ளப்போவது போல் கதை மாறி உள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட நடிகருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

கோபிக்கு எதிர்ப்பு:

பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு குடும்பத்து தலைவியான பாக்கியா என்ற பெண்ணின் வாழ்கையில் நடக்கும் கதையை மையப்படுத்தி தான் சீரியல் செல்கிறது. குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் என்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்தலும், அதில் குற்றம், குறைகளை கண்டுபிடிக்கும் குடும்பத்தினர். பாக்கியாவின் அனைத்து முயற்சிகளுக்கும் தடி விதிக்கும் கணவராக கோபி என்ற கதாபாத்திரம். பாக்கியலட்சுமி வேடத்தில் சுசித்ரா என்பவரும், கோபியாக நடிகர் சதீசும் நடித்து வருகின்றனர்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கண்ணன் பதிவிட்ட புகைப்படம்!

இவர்களின் மூத்த மகன் செழியன் வீட்டில் நாடாகும் எந்த விஷயத்திலும் அக்கறை இல்லாமல் இருப்பான், கிட்டத்தட்ட தன் அப்பாவை போல் தான். மூன்றாவது மகள் இனியாவும் அப்பாவின் செல்லம்தான். 2ம் மகன் எழில் மட்டும் தான் தன் அம்மாவின் சுக துக்கங்களை பற்றி யோசிக்கும் குணமுடையவர். பாக்கியாவின் அனைத்து முயற்சிகளுக்கும் எழில் தான் உறுதுணையாகவும், தூண்டுதலாகவும் இருந்து உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் கோபி தன் மனைவி மற்றும் குடும்பத்திற்கு தெரியாமல் தன் காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூர்த்தி ஸ்டாலினுக்கு நடந்த அடுத்த சோகம் – மாமியார் மரணம்! ரசிகர்கள் ஆறுதல்!

இதற்கு பாக்கியாவை விவாகரத்து செய்யவும் துணிந்து விட்ட கோபி கதாபாத்திரத்திற்கு ஏற்கனேவே மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பு உள்ளது. தற்போது எழில் வேடத்தில் நடிக்கும் நடிகர் வெளியில் சென்றிருக்கும் போது ரசிகைகள் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் பாக்கியாவிற்கு ஆதரவாகவும், கோபியை திட்டியும் பேசியுள்ளனர். அது ஒரு சீரியல் என்பதையும் மீறி மக்கள் அவரை நிஜத்தில் திட்டு இருப்பது தான் அந்த கதாபாத்திரத்தின் வெற்றி என்று பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here