தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி? தளர்வுகள் அளிக்க வாய்ப்பு!!

1
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி? தளர்வுகள் அளிக்க வாய்ப்பு!!
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி? தளர்வுகள் அளிக்க வாய்ப்பு!!
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி? தளர்வுகள் அளிக்க வாய்ப்பு!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கில் இருந்து ஜூன் 7 ஆம் தேதிக்கு மேல் தளர்வுகள் அளிக்கப்பட்டால், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து அனுமதி

தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ள தளர்வில்லா பொது முடக்கமானது மேலும் நீடிக்கப்பட வாய்ப்பில்லை என அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. முன்னதாக தமிழக முதல்வரும் இதே கருத்தை தான் முன்வைத்திருந்தார். அந்த வகையில் தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா அல்லது தளர்வுகளை அளிப்பதா என்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 4) நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

ssc

அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவராத நிலையில், ஜூன் 7 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்படும் என கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒருவேளை தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டால், காய்கறிகள், மளிகை கடைகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தவிர ஹோட்டல்கள், தேநீர் கடைகள் 50 சதவீத இருக்கைகளுடன் அனுமதிக்கப்படலாம் என தெரிகிறது.

ஜியோ (Jio) வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசு – மலிவு விலை 4ஜி போன்கள் அறிவிப்பு!!

முக்கியமாக மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டால், இ பதிவில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதாவது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ பதிவுகள் இல்லாமல் அனுமதி வழங்கப்படும் எனவும், மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்களுக்கு இ பதிவு நடைமுறை அவசியம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Sir please bus open pannuga sir please Chennai la lock agetom please enga native poganum pls bus viduga sir please 🙏🙏🙏🙏🙏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!