பயணிகளுக்காக முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

0
பயணிகளுக்காக முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பயணிகளுக்காக முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பயணிகளுக்காக முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தமிழகத்தில் மீண்டும் முன்பதிவில்லா விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மேலும், வரும் 11ம் தேதி முதல் முக்கிய மாவட்டங்களில் இருந்து இந்த சேவை தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விரைவு ரயில்:

தமிழகத்தில் கடந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மற்ற சேவைகளை தொடர்ந்து ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. ஏனெனில் தொற்று பரவும் அச்சம் காரணமாக பொதுமக்கள் பெரும்பாலும் ரயிலில் பயணம் செய்வதை தவிர்த்தனர். இதனால் ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. ரயில் பயணிகள் இல்லாமல் ரயில்களை இயக்க முடியாததால் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக ரயில்வே துறை கடும் சரிவை சந்தித்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க ரயிலில் முன் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்புவதால் முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்திருந்தது.

Exams Daily Mobile App Download

அதன்படி முதல் கட்டமாக 192 விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஜூன் 26ம் தேதி முதல் நெல்லை- செங்கோட்டை இடையேயான முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட தொடங்கியது. மேலும் திருநெல்வேலி -திருச்செந்தூர், தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி இடையேயான விரைவு ரயில்கள் கடந்த 1ம் தேதி முதல் இயக்கப்பட்டது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மணியாச்சியில் இருந்து தினமும் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு துாத்துக்குடி சென்றடையும்.

Post Office ல் சிறப்பான 3 திட்டங்கள் அறிமுகம் – முழு விவரம் இதோ!

அடுத்த கட்டமாக ஜூலை 11ம் தேதி முதல் சேல‌த்தில் இருந்து கரூர், கோவைக்கு வரும் 11ம் தேதி முதல் முன்பதிவில்லா விரைவு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஈரோடு – மேட்டூர் அணை ரயிலும் 11ம் தேதி முதல் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படுவதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here