தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை அசத்தல்! முழு விவரம் வெளியீடு!

0
தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்து துறை அசத்தல்! முழு விவரம் வெளியீடு!
தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்து துறை அசத்தல்! முழு விவரம் வெளியீடு!
தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை அசத்தல்! முழு விவரம் வெளியீடு!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

சிறப்பு பேருந்துகள்:

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை நாளில் அளிக்கப்படும் விடுமுறையை முன்னிட்டு மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வர். அதனால் மற்ற நாட்களை விட இந்த விடுமுறை தினத்தில் வழக்கத்தை விட பேருந்து மற்றும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்த கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பண்டிகையன்று சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

அதே போல நடப்பாண்டும் தமிழகத்தில் தீபாவளியையொட்டி 6,888 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் அக்டோபர் 21ம் தேதி முதல் 23 தேதி வரை 2,100 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 4218 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் சிறப்பு பேருந்துகள் எங்கெங்கு இயக்கப்படும் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே நகர் பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இயக்கப்படும்.

திருப்பூரில் நாளை எந்தெந்த பகுதிகளில் ‘மின்தடை’ தெரியுமா? உங்களுக்காக முழு ‘List’ இதோ!

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி, பைபாஸ், மாநகராட்சி பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இயக்கப்படும். மேலும் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு 6,370 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,888 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் வாயிலாக பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!