சபரி ஐயப்பன் கோவிலில் அடுத்த 5 நாட்களுக்கு நடை திறப்பு – கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

0
சபரி ஐயப்பன் கோவிலில் அடுத்த 5 நாட்களுக்கு நடை திறப்பு - கோவில் நிர்வாகம் அறிவிப்பு!
சபரி ஐயப்பன் கோவிலில் அடுத்த 5 நாட்களுக்கு நடை திறப்பு - கோவில் நிர்வாகம் அறிவிப்பு!
சபரி ஐயப்பன் கோவிலில் அடுத்த 5 நாட்களுக்கு நடை திறப்பு – கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

தமிழ் மாதத்தின் தொடக்கத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கோவில் நடைதிறப்பு தேதிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில்:

நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக கோவில் சார்பாக நடைபெறும் திருவிழாக்கள், சாமி ஊர்வலம் போன்ற எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது. மேலும் கோவில் நடை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் திறக்கப்பட வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. மக்கள் அதிகம் கலந்து கொள்ளும் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நோய் தொற்று குறைந்துள்ளதால் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனை அடுத்து கேரளாவில் புகழ்பெற்ற கோவில் தலமான சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற ஆகஸ்ட் 25 வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதத்தின் தொடக்கத்தில் 5 நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

Work From Home முறையை ஆதரிக்கும் IT நிறுவனங்கள் – முக்கிய தகவல்!

Exams Daily Mobile App Download

மேலும் வருகிற 21ம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும் என்று அதன் பிறகு அரிவராசனம் பாடி நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இதே போல் நிலக்கல்லில் உடனடி சுவாமி தரிசனத்திற்கு முன்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 5 நாட்கள் கோவில் நடை திறந்திருப்பதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்கு ஏற்ப கேரளா போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பூஜைக்கு பிறகு ஓணம் பண்டிகைக்காக மாதம் 6ம் தேதி நடை திறக்கப்படும் என்றும் இதனை தொடர்ந்து 8ம் தேதி திருவோண சிறப்பு வழிபாடு நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here