தமிழில் ஒரே ஒருவர், கணிதத்தில் 1858 பேர் – 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சதமடித்து சாதித்த மாணவர்கள்!

0
தமிழில் ஒரே ஒருவர், கணிதத்தில் 1858 பேர் - 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சதமடித்து சாதித்த மாணவர்கள்!
தமிழில் ஒரே ஒருவர், கணிதத்தில் 1858 பேர் - 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சதமடித்து சாதித்த மாணவர்கள்!
தமிழில் ஒரே ஒருவர், கணிதத்தில் 1858 பேர் – 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சதமடித்து சாதித்த மாணவர்கள்!

2022 ஆண்டுக்கான இடைநிலைப் பள்ளி (SSLC) மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் பெற்றுள்ள மதிப்பெண் அனைவரையும் வியக்கும் படி செய்துள்ளது.

சதம் அடித்த ஒருவர்:

தமிழகம் முழுவதும் அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு பேச்சு என்றால் அது இன்று வெளியாகியுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களது பொதுத்தேர்வு முடிவுகள் பற்றி தான். இரண்டு வருட கால கட்டத்துக்கு பிறகு மீண்டும் ஒரு ஏக்க எதிர்பார்ப்பை மாணவர்கள் மத்தியில் இந்த பொதுத் தேர்வு முடிவு உண்டாக்கியது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். அவ்விதமாக கடந்த மே மாதம் நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களது பொதுத்தேர்வு முடிவு இன்று ஜூன் 20ல் வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வில் 10 ஆம் வகுப்பில் மொத்தம் 9,12,620 மாணவர்களும், 12 ஆம் வகுப்பில் மொத்தம் 8,06,277 மாணவர்களும் தேர்வெழுதிய நிலையில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை தற்போது வெளியாகி ஓரளவு ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் உள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் 8,21,994 ஆகவும், 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 7,55,998 பேர் என தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு இந்த ஆண்டில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும்.

தமிழக 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மதிப்பெண் மறுகூட்டலுக்கான வழிமுறைகள் வெளியீடு!

இந்த ஆண்டில் வெளியாகியுள்ள தேர்ச்சி விவரத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பெற்றுள்ள மதிப்பெண் அனைவரின் புருவங்களையும் உயர்த்தியுள்ளது. அதாவது 10ஆம் வகுப்பு தமிழ் மொழி பாடத்தில் தூத்துக்குடி மாவட்ட சங்கர வித்யாலயா பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று வியக்க வைத்துள்ளார். இவ்வாறு மாநிலம் முழுவதும் 10 ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டும் 100% சதம் அடித்து தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 12ம் வகுப்பு மொழித் தேர்வில் 47 பேர் 100 மதிப்பெண்களும், கணிதத்தில் 1858 பேரும், வேதியியல் பாடத்தில் 1500 பேரும், இயற்பியல் பாடப்பிரிவில் 634 பேரும் 100 % மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here