இந்தியர்களில் 44% பேர் தான் முகக்கவசம் அணிகிறார்கள் – ஆய்வில் தகவல்!!

0
இந்தியர்களில் 44% பேர் தான் முகக்கவசம் அணிகிறார்கள் - ஆய்வில் தகவல்!!
இந்தியர்களில் 44% பேர் தான் முகக்கவசம் அணிகிறார்கள் - ஆய்வில் தகவல்!!
இந்தியர்களில் 44% பேர் தான் முகக்கவசம் அணிகிறார்கள் – ஆய்வில் தகவல்!!

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தாக்குதலில் மக்கள் பலியாகி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலிலும் இந்தியாவில் 44% மக்கள் தான் முகக்கவசம் அணிகிறார்கள் என ஆய்வு தகவல் கூறுகிறது.

முகக்கவசம்:

இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தாக்கத்தை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக மாநிலங்கள் தோறும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தவிர தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன. இருந்தாலும் மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். கூடுதலாக மத்திய, மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், முகக்கவசம் அணிய வேண்டும், சானிடைசர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 3.57 லட்சம் பேருக்கு தொற்று!!

ஆனால் இந்தியாவில் முகக்கவசம் குறித்த முழுமையான விழிப்புணர்வு மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், இன்று வரை கூட மக்கள் பலர் முகக்கவசம் அணியாமல் தான் பொது இடங்களில் நடமாடுகின்றனர். தவிர முகக்கவசம் அணிபவர்களும் அதை சரியான விதத்தில் உபயோகிக்க தவறி விடுகின்றனர். தவிர மாநில அரசுகளும், மத்திய அரசும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதமாக குறிப்பிட்ட அளவு தொகையை வசூலித்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இத்தகைய பலத்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்ற போதிலும் இந்தியாவில் 44% பேர் தான் முகக்கவசம் அணிகிறார்கள் என ஆய்வு கூறுகிறது. இது குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில், 50% மக்கள் வீட்டிலிருந்து வெளியே போகும் போதிலிருந்து திரும்ப வரும் வரையும் முகக்கவசம் அணிந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது தவிர அருகில் யாராவது அமர்ந்திருக்கையில் மட்டுமே 30% மக்கள் முகக்கவசம் அணிகிறார்கள் என ஆய்வு முடிவு கூறுகிறது. மருத்துவமனைகளில் உயிர்காக்க போராடி வரும் மருத்துவர்கள் பலவித பாதுகாப்பு கவசங்களை அணிந்து சேவை செய்து வருகின்ற போது, மக்களுக்கு முகக்கவசம் குறித்த விழிப்புணர்வு இன்னும் சரியான விதத்தில் இல்லை என்பது வருத்தமளிக்க கூடியதாக இருக்கிறது என கருத்துக்கள் நிலவி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!