சபரிமலை தரிசனம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? கூடுதல் பக்தர்கள் அனுமதி!

0
சபரிமலை தரிசனம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? கூடுதல் பக்தர்கள் அனுமதி!
சபரிமலை தரிசனம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? கூடுதல் பக்தர்கள் அனுமதி!
சபரிமலை தரிசனம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? கூடுதல் பக்தர்கள் அனுமதி!

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு கேரளாவில் உள்ள சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என சபரிமலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் டிக்கெட் :

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கடந்த வருடம் பரவ தொடங்கிய கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்ததை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முன்பதிவு டிக்கெட்கள் அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு மாலை அணிவித்து விரதம் இருந்து இருமுடி கட்டி பக்தர்கள் வருவது வழக்கம்.

Airtel வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ரீசார்ஜ் திட்டம் – 500 MB டேட்டா இலவசம்!

அதே போல் இந்த வருடமும் பக்தர்கள் வருகை புரிய உள்ளனர். தினசரி 30,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பம்பையில் அதிக அளவு தண்ணீர் செல்வதால், தண்ணீர் வரத்து குறையும் வரை பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் நிலக்கல்லில் நேரடி புக்கிங் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபரிமலை பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பக்தர்கள் 48 மணி நேரத்துக்கு முன் செய்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரிமலை டிக்கெட் முன்பதிவு:
  • முதலில் https://sabarimalaonline.org/#/login என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • பெயர், மொபைல் எண், பிறந்த தேதி, அடையாள அட்டை, முகவரி, மாநிலம், மாவட்டம், புகைப்படம் ஆகியவற்றை பதிவிட வேண்டும்.
  • அடுத்ததாக நீங்கள் உள்ளிட்ட தகவல்களை சரிபார்த்து நீங்கள் பதிவிட்ட மொபைல் எண்ணிற்கு ஒடிபி அனுப்ப வேண்டும். பின் ஓடிபி எண்னை பதிவிட்டு முன்பதிவை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.
  • பிரசாதம் முன்பதிவுகளுக்கு ரூ.10 இணையக் கட்டணம் வசூலிக்கப்படும். இ-மெயில், பாஸ்வேர்ட் உள்ளிட்டு உள்நுழைந்து தரிசனம் செய்வதற்கான தேதி தேர்வு செய்தும் பிரசாதத்தில் அரவன, அப்பம், அபிஷேக நெய், விபூதி, மஞ்சள் மற்றும் குங்குமம் எத்தனை தேவை என்பதை பதிவிட்டு ஆன்லைன் பிரசாத டிக்கெட் பெறலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!