ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு – தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்!

0
ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு - தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்!
ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு - தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்!
ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு – தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்!

இந்திய ரயில்வேத்துறை பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது IRCTC இணையதளம் வாயிலாக மக்கள் வீட்டில் இருந்தபடி டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.

டிக்கெட் முன்பதிவு:

இந்தியாவில் அனைத்து துறைகளும் டிஜிட்டல் மையமாகி வரும் வேளையில் ரயில்வே துறையும் பயணிகளுக்கு ஆன்லைன் வாயிலாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் பயணிகள் தற்போது IRCTC இணையதளம் வாயிலாக டிக்கெட் முன் பதிவு செய்து வருகின்றனர். இதனால் பயணிகள் தங்களின் வசதிக்கேற்ப சீட்களை புக் செய்கின்றனர். இந்த முறையில் நேரமும் மிச்சமாகிறது. கடந்த 2021-2022-ம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேயில் 78.5 சதவீதம் டிக்கெட் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வரும் ஆண்டுகளில் இது 90% ஆக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட ரயில் நிலையங்கள் தெற்கு ரயில்வேக்கு உட்பட்டது. ஆந்திரா, கர்நாடகாவின் சில பகுதிகளும் இதனுள் அடங்கும். இதில் படிப்பறிவுள்ள மக்கள் அதிகமுள்ள தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் சுமார் 79% பேர் ஆன்லைன் வாயிலாகவே டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். மீதமுள்ள நபர்கள் மட்டுமே நேரடியாக டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் பெறுகின்றனர்.

Whatsapp பயனர்கள் கவனத்திற்கு – Group Chat ல் வரவிருக்கும் புதிய அப்டேட்!

Exams Daily Mobile App Download

இதனால் 2019-20-ம் நிதியாண்டில் காகித டிக்கெட்டுகளின் சதவீதம் 22.8 சதவீதமாகவும், 2021-22-ம் நிதியாண்டில் 21.5 சதவீதமாகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இணையவழி மூலமாக டிக்கெட் முன்பதிவு அதிகரிப்பதால் டிக்கெட் கவுண்டர்களில் புதிய ஆட்கள் நியமனம் இருக்காது என்று கூறப்படுகிறது. தற்போதைய கணிப்பின் படி இணையதளத்தில் மூலமாக டிக்கெட் முன்பதிவு 90 சதவீதமாக அதிகரித்தால் கவுண்டர்களில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here