திருப்பதி தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
திருப்பதி தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்பவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
திருப்பதி தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்பவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
திருப்பதி தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தரிசன அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நடைமுறை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளதால் திருப்பதியில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.

முக்கிய அறிவிப்பு:

ஆந்திரா மாநிலத்தின் சிறப்பே திருப்பதி கோவில்கள் தான், இதில் மிகவும் பிரபலமானது ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில். நாடு மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள கோவில்களை விட இந்த கோவிலுக்கு தான் பக்தர்கள் அதிகம் உண்டு. இக்கோவிலின் கட்டிடங்கள் பழைய கால முறையில் அமையப்பட்டிருக்கும். இந்தியா முழுவதும் கொரோனா அதீத தாக்கத்தால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து துறைகளிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் பல்வேறு தடுப்பு விதிமுறைகளான கொரோனா தடுப்பூசி , மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி மூலம் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் அமலில் இருந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் திருப்பதி கோவிலில் நோய்த் தொற்று கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் இலவச தரிசன பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் திருப்பதியில் உள்ள சீனிவாசம் விடுதி, அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜசாமி சத்திரம் ஆகிய இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் கவுண்ட்டர்கள் மூடப்பட்டன. தொடர்ந்து கவுண்டர்களில் இலவச தரிசன பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட ‘டைம் ஸ்லாட் டோக்கன்கள்’ வழங்குவதற்காக ஆலோசனை நடத்தப்பட்டு, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு – முக கவசம் கட்டாயம்!

3 இடங்களில் பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் டோக்கன்கள் விரைவாக வழங்கி, சாமி தரிசனத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். இதை தொடர்ந்து மற்றொரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் திருப்பதி கோயிலின் மே மாத முன்னுரிமை டிக்கெட்டை இணையத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நீண்ட கால வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் ஏழுமலையானை தரிசிக்க ஒரு நாளைக்கு ஆயிரம் டோக்கன்கள் வீதம் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மே மாதத்திற்கான முன்னுரிமை டிக்கெட்டை  https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில்முன்பதிவு செய்து கொள்ளலாம். தரிசனம் செய்ய வரும், மூத்த குடிமக்கள் வயது சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், நீண்ட கால தீராத நோய் உள்ளவர்கள் மருத்துவ சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here