தமிழகத்தில் அதிகரிக்கும் ஆன்லைன் திருட்டு – சைபர் க்ரைம் எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் அதிகரிக்கும் ஆன்லைன் திருட்டு - சைபர் க்ரைம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் அதிகரிக்கும் ஆன்லைன் திருட்டு - சைபர் க்ரைம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் அதிகரிக்கும் ஆன்லைன் திருட்டு – சைபர் க்ரைம் எச்சரிக்கை!!

கோவை மாவட்டத்தில் மக்களை ஏமாற்றி ஆன்லைன் மூலமாக மூலமாக நூதன முறையில் மோசடி செய்யும் கும்பல் ஒன்று உள்ளதாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆன்லைன் திருட்டு:

தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் பல்வேறு நிதியுதவி செய்யப்பட்டாலும் மக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் திருட்டு வழக்குகள் நடைபெற்று வருகிறது. பல படித்த இளைஞர்கள் வாழ்வாதாரம் காரணமாக இந்த செயலில் ஈடுபடுத்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் +1 வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை – அரசுக்கு கோரிக்கை!

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நூதன முறையில் ஆன்லைன் மூலமாக திருட்டு நடைபெறுவதாக பல இடங்களில் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில் ராணுவ வீரர் என திருடர்கள் தங்களை அடையாளப்படுத்தி, வேறு இடங்களுக்கு பணி மாறுதல் காரணமாக தன் கார், பைக் மற்றும் பொருட்களை விற்பனை செய்ய உள்ளதாக ஆன்லைன் வலைத்தளங்களில் விளம்பரம் செய்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அதில் மக்களை கவரும் வகையில் குறைந்த விலையில் பதிவிடுகின்றனர். இந்த விளம்பரத்தை பார்த்து ஏமாந்து மக்கள் பலர் அவர்களை தொடர்பு கொள்கின்றனர். அவர்களிடம் முன்பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ‘சைபர் க்ரைம்’ போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் வாட்ஸ் ஆப் மூலமாக ராணுவ அடையாள அட்டை, ராணுவ உடையில் இருக்கும் படங்களை அனுப்புவதாக தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!