தமிழகத்தில் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் !!!

0
தமிழகத்தில் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் !!!
தமிழகத்தில் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் !!!
தமிழகத்தில் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் !!!
தமிழகத்தில் தற்போது நடத்தபட வேண்டிய செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்திட தமிழக உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கல்லூரி தேர்வு !
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ஆயினும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது.
அண்ணா பல்கலை ஆனது ஆன்லைனில் நடத்திய தேர்வுகளில் கலந்து கொள்ள தவறியவர்களுக்கும் மீண்டும் மறுதேர்வினை ஆன்லைனிலேயே நடத்தியது.
ஆன்லைனில் தேர்வுகள் !!
செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது மாணவர்கள் மத்தியில் பெறும் வரவேற்பினை பெற்றது.  தற்போது இந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட வேண்டிய செமஸ்டர்  தேர்வுகளையும் ஆன்லைனிலேயே நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் அவரவர் கல்லூரி மற்றும் அதன் இணைப்பு பெற்ற பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தல்களின் படி தேர்வினை எழுத வேண்டும் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here