ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – ஆளுநர் அனுப்பிய சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம்!!

0
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் - ஆளுநர் அனுப்பிய சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம்!!
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் - ஆளுநர் அனுப்பிய சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம்!!
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – ஆளுநர் அனுப்பிய சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம்!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்வதற்கான அவசர சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநரிடம் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு விளக்கம் அளித்து கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் ரம்மி

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்ட ஏராளமானோர் தங்களின் உயிர்களை மாய்த்துக் கொண்டு வந்தனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய சட்ட மசோதா ஒன்று கடந்த 19ஆம் தேதி என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த அவசர சட்டத்தால் ஏதேனும் பிரச்சனை ஏற்படக்கூடாது என ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இக்குழு ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான சட்டம் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு அறிக்கையை தயார் செய்து தாக்கல் செய்தது. மேலும் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்கு எதிரான மசோதா தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய நிலையில் தற்போது இதனை சட்டமாக்குவதற்கு ஆளுநரிடம் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு – ஆங்கில பயிற்சிக்கு முக்கியத்துவம்!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் ஆளுநர் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைகள் அனைத்தும் மாநில அரசு வழங்குவதற்கான அதிகாரத்தை பெற்றுள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக சட்டத்துறை ஆலோசனை மேற்கொண்டு ஆளுநருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான சட்டத்திற்கு தமிழக ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!