தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை – அரசு அதிரடி!

0
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை - அரசு அதிரடி!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை - அரசு அதிரடி!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை – அரசு அதிரடி!

இளைஞர்கள் அதிக அளவில் ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மி:

ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள விளையாட்டுக்களால் பல இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு முழு மூச்சாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். மேலும், இந்த விளையாட்டு மூலமாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என்கிற ஆசையுடன் விளையாட்டிலேயே மூழ்கி அடிமையாகி அதிக பணத்தை இழந்தும் வருகின்றனர். அதாவது, லட்சக்கணக்கில் இந்த விளையாட்டுகளின் மூலமாக பணத்தை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் பல இளைஞர்கள் தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர். இது மட்டுமல்லாமல் ரம்மி விளையாட்டால் பல்வேறு சமூக பொருளாதார குற்றங்களும், தற்கொலை சம்பவங்களும் நிகழ்வதால் தமிழக அரசு முக்கிய முடிவெடுத்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது, ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை போன்ற பெரிய இழப்பை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டு மூலமாக இளைஞர்கள் அடிமையாவதை ஆராயவும், இது போன்ற ரம்மி விளையாட்டுகளை விளையாடத் தூண்டும்படியான விளம்பரங்களை ஆராயவும், இது போன்ற விளையாட்டுகளை தகுந்த முறையில் கட்டுப்படுத்தவும் சிறப்பு குழு ஒன்று தமிழக அரசு சார்பில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IBPS, RRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

கடந்த சில மாதங்களிலேயே தமிழகத்தில் மட்டுமே 17 பேர் ஆன்லைனில் விளையாட்டுகளின் மூலமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் விளையாட்டுகளின் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கலாம் எனவும், விளையாட்டுக்களால் திறன்கள் மேம்படுவதாக கூறி இளைஞர்களை விளையாட்டுகளில் மூழ்க வைக்கின்றனர். இதுபோன்ற தற்கொலை நிகழ்வுகள் இதற்கு மேலும் நடைபெறக் கூடாது என்பதற்காக ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழகத்தில் தடை செய்வதாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!