தமிழகத்தில் ஆன்லைன் வாயிலாக கட்டிடம் கட்ட அனுமதி – நகராட்சி நிர்வாக இயக்குநர்!

0
தமிழகத்தில் ஆன்லைன் வாயிலாக கட்டிடம் கட்ட அனுமதி - நகராட்சி நிர்வாக இயக்குநர்!
தமிழகத்தில் ஆன்லைன் வாயிலாக கட்டிடம் கட்ட அனுமதி - நகராட்சி நிர்வாக இயக்குநர்!
தமிழகத்தில் ஆன்லைன் வாயிலாக கட்டிடம் கட்ட அனுமதி – நகராட்சி நிர்வாக இயக்குநர்!

தமிழகத்தில் கட்டிடம் கட்டுவதற்கு இனி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இணையதளம் மூலம் அனுமதி அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கட்டிட அனுமதி:

தமிழகத்தில் கட்டிடம் கட்டுவதற்கு அந்தந்த பகுதி நகராட்சி அலுவலங்கங்களில் உரிய அலுவலரிடம் அனுமதி பெறுவது அவசியம். அலுவலர் கட்டிடம் கட்டப்போகும் இடத்தை ஆய்வு செய்து ஆவணங்களை சரிபார்த்த பின் கட்டிட அனுமதி எண் நகராட்சியால் வழங்கப்படும். அதன் பிறகு கட்டிட பணிகள் தொடங்கும். இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு கொள்கை முடிவுகளின் படி கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தியது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இணையதளம் மூலம் அனுமதி வழங்கலாம் என்று தெரிவித்தது.

தமிழகத்தில் 1ம் வகுப்பு மாணவர்களுடன் பெற்றோர்களும் அனுமதி – அமைச்சர் அன்பில் மகேஷ்!

அதன் வழிகாட்டுதலின் பேரில் தமிழக அரசு இணையதளம் மூலம் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தது. பொதுமக்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரியாக இருந்தால், 3 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கட்டிட விண்ணப்பங்களையும், ஆவணங்களையும், உரிம கட்டணங்களையும் தங்களது இருப்பிடத்திலிருந்து இணையதளம் வாயிலாக செலுத்திட மென்பொருள் உருவாக்கப்பட்டு அனைத்து பணிகளும் இணையதளம் வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவக்கம்!

சிறிய குடியிருப்பு கட்டிடங்கள் கட்டும் பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் விதமாக 1200 சதுர பரப்பளவிலான குடியிருப்பு கட்டிடங்களுக்கு கள ஆய்வின்றி 10 நாட்களுக்குள்ளாக அனுமதி வழங்கப்படும் பத்தாயிரம் சதுரடி பரப்பளவு வரைவு திட்ட அனுமதி வழங்கிட உள்ளாட்சிகளுக்கு அதிகார பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. http://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டிட அனுமதி வேண்டி பொதுமக்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!