ஆன்லைன் மூலம் அஞ்சலக RD கணக்கின் தவணை செலுத்தும் முறை – எளிய வழிகாட்டுதல்கள் இதோ!

0
ஆன்லைன் மூலம் அஞ்சலக RD கணக்கின் தவணை செலுத்தும் முறை - எளிய வழிகாட்டுதல்கள் இதோ!
ஆன்லைன் மூலம் அஞ்சலக RD கணக்கின் தவணை செலுத்தும் முறை - எளிய வழிகாட்டுதல்கள் இதோ!
ஆன்லைன் மூலம் அஞ்சலக RD கணக்கின் தவணை செலுத்தும் முறை – எளிய வழிகாட்டுதல்கள் இதோ!

மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்வதை மிகவும் பாதுகாப்பான முறையில் செய்வதற்கு விரும்புகின்றனர். பாதுகாப்பான முறையோடு அதிக லாபமும் அளிக்கும் அஞ்சலக திட்டங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

ரெக்கரிங் டெபாசிட் (RD):

தற்போதைய காலத்தில் சம்பாதிக்கும் பணத்தை மக்கள் தங்கள் ஓய்வு காலத்தில், குழந்தைகளின் எதிர்கால படிப்பிற்காக, அவர்களின் திருமண செலவுகளுக்காக, அல்லது மருத்துவ தேவைகளுக்காக மிகவும் பாதுகாப்பான முறையில் மட்டுமே சேமிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். தனியார் நிதி நிறுவனங்கள் அதிக லாபம் அளிப்பதாக கூறி மக்களை கவர்ந்து, அதில், சில நேரங்களில் மக்கள் ஏமார்ந்து விடும் அவலமும் நடந்து வருகிறது. இதனால் தான் மக்கள் முதலீடுகள் என்றாலே அச்சப்படும் அளவிற்கு நிலைமை ஆகியுள்ளது. ஆனால் தனியார் நிதி நிறுவனங்களை விட அதிக லாபத்தை அளிக்கும் வகையில் அஞ்சல் அலுவலகத்தில் பல திட்டங்கள் உள்ளது.

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் வெளியே செல்ல தடை, கட்டாய சட்டம் அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!

இதற்காக, முதலீடு திட்டங்கள், சேமிப்பு திட்டங்கள், பிக்சட் டெபாசிட் திட்டங்கள், பென்சன் திட்டங்கள் ஆகியவை முன்னதாகவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில், ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் RD திட்டங்கள் தற்போது அதிக பலன்களை தரும் வகையில் உள்ளது. இது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் இந்த திட்டத்தை பற்றி அறியாமல் உள்ளனர். இது நீண்ட கால வைப்பு நிதி திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் பலன்களுக்கு அரசின் வரி சலுகையும் உள்ளது. குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தை நீடித்துக் கொள்ளலாம். இதற்காக ஒவ்வொரு மாதமும் நீங்கள் நிர்ணயிக்கும் தொகையை செலுத்தி வரவேண்டும்.

விஜய் டிவி புது கண்ணம்மா வினுஷாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ!

இந்த திட்டத்துக்கு தற்போது 5.8% வட்டி வழங்கப்படுகிறது. அதவாது நீங்கள் மாதம் ரூ. ரூ. 7000 சேமித்தால் 5 ஆண்டுகளில் அதற்கு வட்டி சேர்த்து ரூ. 4,87,877 முதிர்வு தொகையாக கிடைக்கும். தற்போது ஆன்லைன் மூலமாகவே இந்த திட்டத்தில் பணத்தை செலுத்திக் கொள்ளலாம். முதல்முதலில் திட்டத்தை ஆரம்பிக்கும் போது மட்டுமே நேரடியாக அஞ்சலகத்திற்க்கு செல்ல வேண்டும். அதன்பிறகு, ஆன்லைன் மூலம் செலுத்திக் கொள்ளலாம். இதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் முறை:
  • முதலில், இந்திய போஸ் பேமெண்ட் வங்கியின் IPPB ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.
  • அதில், DOP Products என்பதற்கு சென்று Recurring Deposit என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இந்த பக்கத்தில் உங்களுடைய RD கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் ID ஐ பதிவிட வேண்டும்.
  • இப்பொழுது, installment duration மற்றும் தொகையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • சிறிது நேரத்தில் உங்களின் RD திட்டத்தின் payment transfer செய்தது வெற்றிகரமாக முடிந்தது என மெசேஜ் வரும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!