75% PF பணம் எப்போது எடுக்கலாம்? முழு விபரங்கள் இதோ!!

0
75% PF பணம் எப்போது எடுக்கலாம்? முழு விபரங்கள் இதோ!!
75% PF பணம் எப்போது எடுக்கலாம்? முழு விபரங்கள் இதோ!!
75% PF பணம் எப்போது எடுக்கலாம்? முழு விபரங்கள் இதோ!!

ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்பு பயனளிக்கும் தொகை தான் பிஎஃப் தொகை. தற்போது இதன் 75% தொகையை எப்போது பெறலாம் என்ற தகவலும் மற்றும் அதனை எப்படி பெறலாம் என்னும் தகவலும் வெளியாகியுள்ளது.

பிஎஃப் தொகை:

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்காலத்தின் நலனுக்கேற்ப சேர்க்கப்படும் தொகை தான் பிஎஃப் தொகை. இது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஒன்றாகும். இந்த பணத்தை தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின்பு பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தை இந்தியாவில் கடந்த 1952ம் ஆண்டு துவங்கப்பட்டது. பின்பு கடந்த 1971ம் ஆண்டு முதல் ஓய்வூதிய திட்டத்தை இத்திட்டத்துடன் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

தற்போது ஊழியர்கள் தங்களது பிஎஃப் தொகையில் இருந்து 75% தொகையை எப்போது பெறலாம்? எப்படி பெறலாம்? என்ற வழிமுறைகள் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு ஊழியர் வேலையில்லாமல் இருந்தால் அல்லது ஓய்வு பெற்றால் தனது பிஎஃப் தொகையை திரும்ப பெறலாம். மேலும் ஊழியர்கள் வேலையில்லாமல் இருக்கும் பொழுது தங்களது பிஎஃப் தொகையில் இருந்து 75% தொகையை முதலில் பெற்றுக் கொள்ளலாம்.

PF வாடிக்கையாளர்கள் இருப்பு தொகை – ஆன்லைனில் அறிந்து கொள்ள வழிமுறை!!

மீதமுள்ள 25% தொகையை அவர் பணியின்மைக்கு இரண்டு மாத காலத்திற்கு பின்பு தான் பெற முடியும். இதனை ஆன்லைன் மூலம் திரும்ப பெற வேண்டும் என்றால் முதலில் ஆதாருடன் UAN இணைக்கப்பட வேண்டும். பின்பு unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface என்னும் தளத்திற்கு சென்று UAN மற்றும் அதனுடைய கடவுச்சொல்லை பதிவு செய்ய வேண்டும்.

  • அதில் Claim என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து தங்களது வங்கி கணக்கின் கடைசி நான்கு நம்பரை பதிவு செய்ய வேண்டும்.
  • பின்பு ‘Proceed for Online Claim’ என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து பி.எஃப் அட்வான்ஸ் என்னும் மெனுவை தேர்ந்தெடுக்கவும்.
  • அந்த மெனுவில் தொகை பெறுவதற்கான நோக்கத்தை பதிவு செய்து தேவையான தொகையை பதிவிட வேண்டும்.
  • பின்பு அதில் உள்ள Get Aadhaar OTP என்னும் ஆப்ஷனை கிளிக் செய்தால் ஆதரவுடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட நம்பருக்கு ஓர் OTP வரும்.
  • அதனை பதிவு செய்தால் உங்கள் கோரிக்கை சமர்ப்பிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!