தமிழகத்தில் ஆன்லைன் மோசடியால் பணத்தை இழக்கும் மக்கள் – எச்சரிக்கை மக்களே.. காவல்துறை அறிவுரை!

0
தமிழகத்தில் ஆன்லைன் மோசடியால் பணத்தை இழக்கும் மக்கள் - எச்சரிக்கை மக்களே.. காவல்துறை அறிவுரை!
தமிழகத்தில் ஆன்லைன் மோசடியால் பணத்தை இழக்கும் மக்கள் - எச்சரிக்கை மக்களே.. காவல்துறை அறிவுரை!
தமிழகத்தில் ஆன்லைன் மோசடியால் பணத்தை இழக்கும் மக்கள் – எச்சரிக்கை மக்களே.. காவல்துறை அறிவுரை!

தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சியினால் வங்கி சார்ந்த வேலைகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே செய்யப்பட்டு வருகிறது இதற்கு மத்தியில் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துவிட்டது. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை இழக்கும் நிலை நேரிடுகிறது.

ஆன்லைன் மோசடி

நாடு முழுவதும் வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது வீட்டில் இருந்தபடியே எந்த நேரத்தில் வேணாலும் பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. பணம் எடுப்பது, பணம் டெபாசிட் செய்வது, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவைகளையும் வீட்டில் இருந்தபடியே பெறலாம். இவ்வாறு மக்கள் அதிக அளவு ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சில மோசடிகளும் நடைபெற்று வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

வங்கி வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணைப் பெற்று வங்கியிலிருந்து ஊழியர்களை போல பேசி வாடிக்கையாளர்களிடமிருந்து தனிப்பட்ட வங்கி சார்ந்த தகவல்களை திருடி விடுகின்றனர். இந்த விவரங்களை வைத்து வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்து விடுகின்றனர். இது போன்ற ஆன்லைன் மோசடி திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகரித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது.

10,000 அரசு பணியிடங்கள் – விரைவில் அறிவிப்பு வெளியீடு.. முதல்வர் தகவல்!

Exams Daily Mobile App Download

அம்மாவட்டத்தில் 4ஜி சிம் வைத்திருப்பவர்கள் 5ஜி சிம் செல்போன் மூலம் அதனை அப்டேட் செய்ய வேண்டும் எனக் கூறி மோசடி கும்பல் வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடி விடுகின்றனர். அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மோசடி வலையில் சிக்கியுள்ளவர்கள் 1930 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!