WhatsApp செயலியில் Profile & Online வசதியை மறைக்கும் அம்சம் – புதிய அறிமுகம்!

0
WhatsApp செயலியில் Profile & Online வசதியை மறைக்கும் அம்சம் - புதிய அறிமுகம்!
WhatsApp செயலியில் Profile & Online வசதியை மறைக்கும் அம்சம் - புதிய அறிமுகம்!
WhatsApp செயலியில் Profile & Online வசதியை மறைக்கும் அம்சம் – புதிய அறிமுகம்!

வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களது ப்ரொபைல் படங்கள் மற்றும் ஆன்லைனில் கடைசியாக தோன்றிய விவரங்களை மறைக்கும் வகையில் ஒரு புதிய அம்சத்தை பரிசோதித்து வருவதாகவும், அவற்றை விரைவில் வெளியிடும் எனவும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

புதிய அம்சம்

உலகின் முன்னணி தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் அப் பல்வேறு புதிய அம்சங்களை தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பயனரின் தனி உரிமம் பாதிக்கப்படாத வண்ணம் சில வகையான செயல்பாடுகளை புதிய அப்டேட் மூலம் கொடுத்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது வாட்ஸ் அப் நிறுவனம், பயனர்கள் கடைசியான ஆன்லைனில் இருந்த விவரங்களை ஒரு சிலருக்கு மட்டும் மறைக்கும் வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது.

நீட் தேர்வு 2021 ஒத்திவைப்பு? மத்திய அரசுக்கு கோரிக்கை!

இதனுடன் வாட்ஸ் அப் பயனர்களின் ப்ரொபைல் புகைப்படம், கடைசியாக ஆன்லைனில் தோன்றிய விவரம் ஆகியவற்றை சிலருக்கு மறைக்கும் வகையில் அமைத்து கொள்ளும் வசதியை வாட்ஸ் அப் உருவாக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. தற்போது வரை வாட்ஸ் அப் பயனர்கள், ப்ரொபைல் புகைப்படம், ஆன்லைனில் தோன்றிய விவரம் ஆகியவற்றை அனைவரும் பார்க்கும் வகையில் அல்லது மொபைலில் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கள் மட்டுமே காணும் வகையில் இருந்த அம்சத்தை பயன்படுத்தி வந்தனர்.

தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்களின் பள்ளிகளுக்கு சீல் – அமைச்சர் அறிவிப்பு!

மேலும் அனைத்து நபர்களுக்கும் மறைக்கும் அம்சமும் பயன்பாட்டில் இருந்தது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே வாட்ஸ் அப் விவரங்களை மறைக்கும் வசதிகள் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் வாட்ஸ் அப், அதன் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் விதத்தில் ப்ரொபைல் புகைப்படங்கள், ஆன்லைனில் தோன்றிய விவரம் ஆகியவற்றை ஒரு சிலருக்கு மட்டும் மறைக்கும் அம்சத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான ஆய்வுகளை வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருவதாகவும், இப்புதிய அம்சத்தின் அதிகாரப்பூர்வ பயன்பாடு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!