ஆன்லைனில் இலவசமாக பிறப்பு & இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் – அரசு அறிவிப்பு!

0
ஆன்லைனில் இலவசமாக பிறப்பு & இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் - அரசு அறிவிப்பு!
ஆன்லைனில் இலவசமாக பிறப்பு & இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் - அரசு அறிவிப்பு!
ஆன்லைனில் இலவசமாக பிறப்பு & இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இலவசமாக இணையதளம் மூலமாக மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சேவைக்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பிறப்பு, இறப்பு குறித்து பதிவு செய்வது அவசியமான ஒன்றாகும். மேலும் இது குறித்து பதிவு செய்ய அந்தந்த நகர பஞ்சாயத்து அலுவலகத்தின் மூலம் பதிவு செய்ய முடியும். இதனை பதிவு செய்வதன் மூலம் அரசின் சலுகைகளை பெற முடியும். தமிழக அரசின் உத்தரவின் படி ஒவ்வொரு பிறப்பும் 14 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் மற்றும் இறப்பு 7 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்ய தவறும் பட்சத்தில் அரசின் எந்த ஒரு சலுகை மற்றும் நலன்களை பெற முடியாது.

இந்தியாவில் இனி கோதுமை ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு அறிவிப்பு!

தற்போது அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் அரசின் அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலமே பெறலாம். அதாவது அரசினால் வழங்கப்படும் ஆதார், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை ஆகிய ஆவணங்கள் அனைத்தும் தற்போது இணையதளம் வாயிலாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் மக்கள் எளிதில் குறுகிய காலத்தில் தேவையான சான்றிதழ்களை பெற்று கொள்ள முடியும்.

அந்த வகையில் தற்போது பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இலவசமாக இணையதளம் மூலமாக மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2018ம் ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டுக்கான மருத்துவமனை மற்றும் பிற இடங்களில் நிகழ்ந்த பிறப்பு மற்றும் இறப்புகள் அனைத்தும் மென்பொருள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் இந்த சான்றிதழை இலவசமாக இணையதளம் மூலம் பெற்று கொள்ளலாம். மேலும் எத்தனை நகல்கள் வேண்டுமானாலும் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here