SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் கிரெடிட் கார்டு பின் உருவாக்கம்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஆன்லைனில் கிரெடிட் கார்டு பின் உருவாக்கம்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஆன்லைனில் கிரெடிட் கார்டு பின் உருவாக்கம்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் கிரெடிட் கார்டு பின் உருவாக்கம்!

இந்தியாவின் முன்னணி வங்கித்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), ஆன்லைன் மூலம் கிரெடிட் கார்டு பின்னை உருவாக்கும் சில எளிய வழிமுறைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களையும் இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கார்டு பின் உருவாக்கம்

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ரிவார்ட் கார்டுகள், ஷாப்பிங் கார்டுகள், டிராவல் & ஃபியூயல் கார்டுகள், வங்கி பார்ட்னர்ஷிப் கார்டுகள் மற்றும் பிசினஸ் கார்டுகள் என பல்வேறு வகையான கிரெடிட் கார்டுகளை வழங்குகிறது. இப்போது முதல் முறையாக SBI வங்கியின் கிரெடிட் கார்டுகளை நீங்கள் உபயோகிப்பவராக இருந்தால் அல்லது புதிய கார்டுக்கு பதிவு செய்திருந்தால், அடுத்த கட்டமாக கிரெடிட் கார்டு பின் எண்ணை உருவாக்க வேண்டும்.

IPL 2021 : பிளேஆப் சுற்றுக்குள் நுழையுமா டெல்லி? இன்று ராஜஸ்தான் உடன் பலப்பரீட்சை!

இப்போது இந்த பின் எண்ணை உருவாக்க வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. அதாவது நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் எளிதாக கிரெடிட் கார்டு பின்னை உருவாக்க முடியும். அதற்காக பயனர்கள் கீழ்காணும் வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

  • அந்த வகையில் முதலாவதாக, Sbicard.com இணையதளத்துக்குள் செல்லவும்.
  • SBI கார்டு ஆன்லைன் கணக்கில் உள்நுழைய தேவையான சான்றுகளை அதாவது
  • பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தவும்.
  • இப்போது இடது பக்க மெனுவில் My Account பிரிவுக்குச் சென்று Manage PIN’ என்பதைக் கிளிக் செய்யவும்
  • கீழ் தோன்றும் பெட்டியில் நீங்கள் பின்னை உருவாக்க விரும்பும் கிரெடிட் கார்டை தேர்ந்தெடுக்கவும்.
  • இப்போது நீங்கள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP பெறுவீர்கள்.
  • அதை சரியான இடத்தில் உள்ளிட வேண்டும்.
  • நீங்கள் அமைக்க விரும்பும் ATM பின்னை உள்ளிட்டு submit என்பதைக் கிளிக் செய்யவும்
  • சரிபார்ப்பிற்குப் பிறகு, உங்கள் அட்டை பின் வெற்றிகரமாக உருவாக்கப்படும்.

சாட்போட் ILA மூலம் SBI கிரெடிட் கார்டு PIN உருவாக்க:

  • சாட்போட் ILA ல் உள்நுழைந்து How do I generate transaction PIN for my credit card என்று சமர்ப்பிக்கவும்.
  • இப்போது Update PIN என்பதைக் கிளிக் செய்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட
  • மொபைல் எண்ணில் நீங்கள் பெறும் OTP ஐ உள்ளிடவும்.

சம்பள கணக்கில் PF வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – உமாங் செயலி அறிமுகம்!

  • இப்போது submit என்பதைக் கிளிக் செய்து புதிய PIN ஐ இரண்டு முறை உள்ளிடவும் தொடர்ந்து Update PIN என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு கார்டு பின் உருவாக்கம் குறித்த செய்தி கிடைக்கும்.

சாட்போட் ILA மூலம் SBI Add-on கிரெடிட் கார்டு PIN ஐ உருவாக்க:

  • சாட்போட் ILA வில் உள்நுழைந்து How do I generate transaction PIN for my credit card என்று சமர்ப்பிக்கவும்.
  • இப்போது Add-on கார்டு என்பதைக் கிளிக் செய்து Update PIN என்பதை கிளிக் செய்யவும்
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP கிடைக்கும்.
  • அந்த OTP ஐ உள்ளிட்டு submit என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது புதிய PIN ஐ இரண்டு முறை உள்ளிட்டு, செயல்முறையை முடிக்க Update PIN என்பதைக் கிளிக் செய்யவும்.

SBI கிரெடிட் கார்டு பின்னை ஆன்லைனில் மாற்ற:

  • உங்கள் நெட் பேங்கிங் கணக்கில் உள்நுழைந்து Manage Pin என்பதை கிளிக் செய்யவும்
  • இப்போது நீங்கள் PIN ஐ மாற்ற விரும்பும் கார்டைத் தேர்ந்தெடுத்து ‘OTP ஐ உருவாக்கு’ என்பதைக் கிளிக் செய்யவும்
  • இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP கிடைக்கும்.
  • OTP ஐ உள்ளிட்டு புதிய PIN ஐ இரண்டு முறை உள்ளிடவும்.
  • இப்போது submit என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல் வங்கி மூலம் SBI கிரெடிட் கார்டு பின்னை மாற்ற:

  • தேவையான சான்றுகளைப் பயன்படுத்தி உங்கள் மொபைல் வங்கி கணக்கில் உள்நுழைந்து Service Requests எனும் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • இப்போது Manage Pin விருப்பத்தைக் கிளிக் செய்து, தற்போதுள்ள பின்னை மாற்ற விரும்பும் அட்டையைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இப்போது ‘OTP ஐ உருவாக்கு’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP கிடைக்கும்.
  • OTP ஐ உள்ளிட்டு தேவையான இடத்தில் இரண்டு முறை புதிய PIN ஐ உள்ளிடவும்.
  • இப்போது செயல்முறையை முடிக்க submit என்பதைக் கிளிக் செய்யவும்.

இது தவிர SBI கார்டு வாடிக்கையாளர் 1860 180 1290 அல்லது 39 02 02 02 என்ற உதவி எண்ணை பயன்படுத்தி உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து IVR அழைப்பு மூலம் SBI கிரெடிட் கார்டு பின்னை உருவாக்கலாம். அதற்காக:

  • முதலில் உங்கள் கிரெடிட் கார்டு PIN ஐ உருவாக்க விருப்பம் 6 ஐத் தேர்ந்தெடுக்கவும்.
  • இப்போது உங்கள் 16 இலக்க SBI கார்டு எண், DD MD YMYYY மற்றும் அட்டை காலாவதி தேதி ஆகியவற்றை MM YY வடிவத்தில் உள்ளிடவும்.
  • இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP கிடைக்கும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியில் நீங்கள் பெற்ற 6 இலக்க OTP ஐ உள்ளிடவும்.
  • இப்போது புதிய 4 இலக்க PIN எண்ணை தேர்ந்தெடுக்கவும் அல்லது அமைக்கவும்.
    அதை மீண்டும் உறுதிப்படுத்தவும்.
  • சரிபார்ப்புக்கு பின்னர், IVR இல் உறுதி செய்தி கொடுக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!