மார்ச் 31 வரை பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – இரவு ஊரடங்கு அமல்? அரசு அறிவிப்பு!

0
மார்ச் 31 வரை பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் - இரவு ஊரடங்கு அமல்? அரசு அறிவிப்பு!
மார்ச் 31 வரை பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் - இரவு ஊரடங்கு அமல்? அரசு அறிவிப்பு!
மார்ச் 31 வரை பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – இரவு ஊரடங்கு அமல்? அரசு அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளை அறிவத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து டெல்லியில் பொதுமக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவதியுறுவதால் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக டெல்லி அரசாங்கம் அறிவித்துள்ளது.

பள்ளி திறப்பு

இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. மேலும் தொற்று பரவல் குறைந்து வரும் மாநிலங்களில் பொதுமக்களின் தேவைகளுக்கேற்ப தளர்வுகளை படிப்படியாக அறிவித்து வருகின்றனர். இதில் குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தீவிரமடையும் ரஷ்யா, உக்ரைன் போர் – இந்தியர்களை தரைவழியாக மீட்க நடவடிக்கை! பிரதமர் ஆலோசனை!

இதனை தொடர்ந்து டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அத்துடன் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதுமாக திரும்ப பெறப்படும் என்று இன்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக ரூ.1000 – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

அதன்படி டெல்லியில் இரவு நேர ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளது. அத்துடன் பள்ளிகள் வருகிற ஏப்ரல் 1ம் தேதி அன்று திறக்கப்பட உள்ளது. நேரடி வகுப்புகள் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நடத்தப்பட வேண்டும். அத்துடன் மார்ச் 31ம் தேதி வரை மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.2000 இருந்து ரூ.500 ஆக குறைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here