ஜூன் 1 முதல் 30 வரை 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு – அரசு திடீர் அறிவிப்பு!

0
ஜூன் 1 முதல் 30 வரை 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு - அரசு திடீர் அறிவிப்பு!
ஜூன் 1 முதல் 30 வரை 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு - அரசு திடீர் அறிவிப்பு!
ஜூன் 1 முதல் 30 வரை 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு – அரசு திடீர் அறிவிப்பு!

ஹரியானா மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை உள்ள 30 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்பிற்காக டேப்லட்கள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகள்:

கொரோனா தொற்று குறைந்துள்ளதால் இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. பொதுத்தேர்வு முடிந்து கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் இழந்த கல்வித்திறனை மீட்டெடுக்க பல மாநிலங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் கோடை விடுமுறை நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்த திட்டமிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது ஜூன் 1 முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏதுவாக டேப்லட், சிம் கார்டு என எல்லாமே அரசின் சார்பாகவே வழங்கவுள்ளனர். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் படிப்பு முடிந்து செல்லும் போது அந்த டேப்லட்டை அந்தந்த பள்ளியிலேயே ஒப்படைத்து விட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் வழங்க 23 ஆயிரத்து 585 டேப்லட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

முதல் வாரத்திலேயே நம்பர் 1 இடத்தை பிடித்த ‘செல்லம்மா’ – சூப்பர் வரவேற்பு!

இதனையடுத்து ஜூன் 1 முதல் 30 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க கூடாது எனவும், 24 மணி நேரமும் ஆசிரியர்கள் சுறுசுறுப்பாக வேலை பார்க்க வேண்டும் எனவும், மாணவர்கள் பாடம் சம்மந்தமாக எந்த விளக்கம் கேட்டாலும் எந்த நேரத்திலும் சொல்லி தர ஆசிரியர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும், மாணவர்களுக்கு ஏதேனும் வேலை கொடுத்து அதனை முடித்து வர சொல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக கோடை விடுமுறையில் மாணவர்கள் கல்வி கற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here