ஆன்லைனில் மாணவர் சேர்க்கை – கோவை அரசு பள்ளி அசத்தல்..!

0

கொரோனா பரவலை தடுக்க பலரும் பல வித்யாசமான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதில் தமிழகத்தில் கோவையில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

நோய் பரவல்:

நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமான மத்திய மாநில அரசுகள் பொது முடக்கத்தை அமல் படுத்தியது. கூடுதலாக, வெளியில் அலைய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடப்பட்டது. இதனை செயல் ஆக்கும் விதமாக கோவை அரசு பள்ளி புதுமையான முயற்சி ஒன்றை எடுத்து உள்ளது.

கோவை அரசு பள்ளி:

கோவை அருகே உள்ளது ஓத்தாகல்மண்டபம். இங்கு உள்ள அரசு பள்ளி மிகவும் வித்யாசமான ஒன்று. இது மத அரசு பள்ளிகள் போல் அல்லாமல் வளாகத்தை கண்காணிக்க சிசிடிவி கேமரா, ஸ்மார்ட் கிளாசுஸ்ரூம், மேலும் பல வசதிகளுடன் இயங்கி வருகிறது. ஒரு தனியார் பள்ளியை போல் இயங்கி வருகிறது.  இவர்களுக்கு என்று தனி முகநூல் பக்கம், அதிகாரப்பூர்வ இணையதளம் என்று பல சிறப்பு அம்சங்களுடன் உள்ளது. இதனை இந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வல நிறுவனம் நடத்தி வருகிறது.

புதிய முயற்சி:

இந்த நிலையில், கொரோனா காலத்தில் பெற்றோர், குழந்தைகள் மற்றும் படிக்கும் மாணவர்கள் வருவதை தடுக்க இந்த பள்ளியின் சார்பில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை  நடைபெறும் என்று கூறியுள்ளது. இந்தனை பற்றி அந்த பள்ளியின் முதல்வர்  கூறுகையில் ” பெற்றோர் எங்களிடம் மாணவர் சேர்க்கை  குறித்து தொடர்ந்து கேட்டு வந்தனர். ஆனால், அவர்களின் அலைச்சலை தடுக்கும் விதமாக நாங்கள் ஆன்லைன் மூலம் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்து உள்ளோம். இதன் மூலம் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெறும். தற்போது பதிவு மட்டும்  நடைபெறுகிறது அரசு அறிவித்தததும் அடுத்த கட்ட முயற்சியில் இறங்குவோம்” என்று தெரிவித்து உள்ளார்.

ONLINE APPLICATION

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!