ஆதார் அட்டையில் ஆன்லைன் மூலமாக முகவரி மாற்றம் – எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் அட்டையில் ஆன்லைன் மூலமாக முகவரி மாற்றம் - எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் அட்டையில் ஆன்லைன் மூலமாக முகவரி மாற்றம் - எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் அட்டையில் ஆன்லைன் மூலமாக முகவரி மாற்றம் – எளிய வழிமுறைகள் இதோ!

நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான தனித்துவமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை இருக்கிறது. அதனால் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்ட விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். அந்த வகையில் ஆதார் அட்டையில் முகவரியை எளிமையாக எப்படி மாற்றுவது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆதார் அட்டை:

ஆதார் அட்டை என்பது மக்களின் முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் வங்கி கணக்கு தொடங்குவது முதல் அனைத்து தேவைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் அதில் கொடுத்துள்ள விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். மேலும் அதில் எதாவது மாறுதல்கள் இருந்தால் அதனை உடனே அப்டேட் செய்ய வேண்டும். அந்த வகையில் அடிக்கடி ஆதார் அட்டையில் மாற்றம் செய்யப்படுவது முகவரி தான்.

Exams Daily Mobile App Download

ஒரு நபர் புதிதாக ஒரு இடத்திற்கு சென்றால் அவர் ஆதாரில் தன்னுடைய முகவரியை மாற்றுவது கட்டாயம் ஆகும். அதனால் UIDAI ஆன்லைனில் எளிமையாக முகவரியை மாற்ற வாய்ப்பு வழங்கி இருக்கிறது. அதன் மூலம் ஒருவர் வீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையில் தங்களின் முகவரியை மாற்றிக் கொள்ளலாம். மேலும் ஆதார் அட்டையில் முகவரியை எப்படி எளிமையான வழிமுறைகளை பின்பற்றி மாற்றுவது என்பது பற்றி முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

எளிய வழிமுறைகள்:

  • முதலில் அரசின் https://uidai.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.
  • அதில் My aadhaar என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பின் Update Demographics Data online என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.
  • அது அடுத்த பக்கத்திற்கு செல்லும் அதில் Login ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் ஆதார் எண் மற்றும் ஒரு முறை ஓடிபியை பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும்.
  • அதில் உங்களது மொபைல் எண்ணை கொடுத்ததும் ஓடிபி வரும், பெறப்பட்ட ஓடிபி உடன் கேப்ட்சா எழுத்துக்களை பதிவிட வேண்டும்.
  • இதனை கொடுத்து லாகின் செய்தால், இது அடுத்த பக்கத்தை காட்டும்.
  • அதில் ஆதார் புதுபிக்கவும் என்ற விருப்பத்தினை கொடுத்து கிளிக் செய்ய வேண்டும். அடுத்த பக்கத்தில் எதனை மாற்றவேண்டுமே அதனை கிளிக் செய்து Proceed to update aadhaar என்பதை கொடுக்க வேண்டும்.
  • அதில் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி போன்றவை இருக்கும். அதில் உங்களுக்கு முகவரியை மாற்ற வேண்டும் என்றால் அதனை கிளிக் செய்ய வேண்டும்.
  • முகவரியை புதுப்பிக்க விரும்பினால் தற்போது உள்ள புது முகவரியை சரியாக கொடுக்க வேண்டும். அதேபோல பின் கோடு, சம்பந்தப்பட்ட நகரம் எல்லாம் சரியாக கொடுக்க வேண்டும். இறுதியாக ஆதார் எண்ணை உள்ளிட்ட பிறகு, கிளிக் என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதற்கு கட்டணமாக ரூ. 50 வசூலிக்கப்படும். பின் உங்களது முகவரியை அதிகாரிகள் சரிபார்த்து புதிய முகவரியுடன் அட்டை 90 நாட்களுக்குள் கிடைக்கும்.
  • மேலும் ஆன்லைன் மூலமாக முகவரி மாற்றம் செய்ய முடியாதவர்கள் ஆதார் தொடர்பான பிற செயல்பாடுகளுக்காக ஆதார் சேவை மையங்களை (ASK) அணுகலாம்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!