சூப்பர் அம்சங்களுடன் OnePlus 9 மொபைல் – சலுகை விவரம்!

0
சூப்பர் அம்சங்களுடன் OnePlus 9 மொபைல் - சலுகை விவரம்!
சூப்பர் அம்சங்களுடன் OnePlus 9 மொபைல் - சலுகை விவரம்!
சூப்பர் அம்சங்களுடன் OnePlus 9 மொபைல் – சலுகை விவரம்!

மொபைல் போனில் தற்போது பலப் பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதிக வரவேற்பு உள்ள OnePlus 9 மொபைலின் அறிமுக சலுகைகளை பற்றி காண்போம்.

OnePlus 9:

தொலைபேசி என்பது முன்னதாக தொலைவில் உள்ளவர்களுடன் அவசர காலத்தில் பேசுவதற்கு என்று மட்டுமே இருந்தது. வளர்ந்து வரும் நவீன யுகத்தில் ஸ்மார்ட் போன்களில் இல்லாத வசதிகளே இல்லை என்ற நிலை வந்துள்ளது. அந்த அளவிற்கு புதிது புதிதாக பல வசதிகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இரட்டை டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனை சாம்சங் கேலக்ஸி வெளியிடுவதற்கு முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் அதன் டீசரை வெளியிட்டுள்ளது.

ரூ.130 க்குள் உள்ள அசத்தலான அம்சங்களுடன் உள்ள ப்ரீபெய்டு திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

இந்தியாவில், ஒன்பிளஸ் 9 5 ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இவை,ஆஸ்ட்ரல் பிளாக், ஆர்க்டிக் ஸ்கை மற்றும் விண்டர் மிஸ்ட் ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது. 8 ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 9 பேசிக் மாடலின் விலை ரூ. 49,999 ஆகும். 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 9 இன் டாப்-எண்ட் மாடலின் விலை 54,999 ரூபாய் ஆகும்.

TN Job “FB  Group” Join Now

இந்தியாவில் இந்த மொபைலை அமேசான் மூலமாகவோ அல்லது ஒன்பிளஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலமாகவோ வாங்க முடியும். எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ முறைகளில் ரூ .3000 வரை தள்ளுபடி மற்றும், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளுக்கு 10% வரை கேஷ்பேக் ஆஃபரில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 9 இல் 6.55 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே , 1080 × 2400 பிக்சல் ஸ்க்ரீன் ரிசல்யூஷன் உடன் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 9-ல் 4500mAh பேட்டரி உள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி? – பிசிசிஐ தீவிர பேச்சுவார்த்தை!

50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் கேமரா மற்றும் டூயல் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா இந்த மாடலில் வருகிறது. 16 மெகாபிக்சல் சோனி IMX471 சென்சார் முன்பக்கத்தில் உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!