இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றுக்கு முதல் பலி – வேகமெடுக்கும் பாதிப்பு! பொதுமக்கள் அச்சம்!

0
இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றுக்கு முதல் பலி - வேகமெடுக்கும் பாதிப்பு! பொதுமக்கள் அச்சம்!
இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றுக்கு முதல் பலி - வேகமெடுக்கும் பாதிப்பு! பொதுமக்கள் அச்சம்!
இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றுக்கு முதல் பலி – வேகமெடுக்கும் பாதிப்பு! பொதுமக்கள் அச்சம்!

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு 54 வயதுடைய நபர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இந்த மாநிலத்தில் தொற்றின் வேகம் தீவிரமடைந்துள்ளது.

ஓமைக்ரான் தொற்றுக்கு முதல் பலி!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில் ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் முதன் முதலில் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் 21 மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்று இந்தியாவில் 1250 பேருக்கு மேல் பரவியுள்ளதாக புள்ளி விவர பட்டியல் தெரிவித்துள்ளது. ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்கள் முதல் இரண்டு மாநிலங்களாக உள்ளன. தமிழகத்திலும் நைஜீரியாவிலிருந்து வந்த விமான பயணி மூலம் தொற்று பரவுகிறது.

தமிழகத்தில் ஜன.2ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாடு , கர்நாடகா ,மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓமைக்ரான் தொற்று பாதித்த ஒருவர் இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மராட்டிய மாநிலம் Pimpri-Chinchwad பகுதியைச் சேர்ந்த 54 வயது நபர் நைஜீரியாவுக்கு பயணம் செய்ததன் விளைவாக பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர் கடந்த 28ம் தேதி உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 பொங்கல் பரிசுத்தொகை – அரசுக்கு கோரிக்கை!

இந்நிலையில் அவர் ஓமைக்ரான் தொற்றால் மரணமடைந்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. அதன் அடிப்படையில் அவருடைய ரத்த மாதிரிகள் தேசிய ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு முடிவில் மரணமடைந்த நபர் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ஓமைக்ரானுக்கு முதலாவது உயிரிழப்பு மராட்டிய மாநிலத்தில் பதிவாகி உள்ளது. மராட்டிய மாநிலத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 198 பேரும் ஒட்டு மொத்தமாக 450 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தொற்று பரவல் தீவிரமடைந்த நிலையில் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஓமைக்ரான் பரவல் குறையும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!