சன் டிவி ‘அபியும் நானும்’ சீரியல் ஒரு மணிநேர எபிசோட் – சிறப்பு தோற்றத்தில் விஜய் பட ஹீரோயின்!

0
சன் டிவி 'அபியும் நானும்' சீரியல் ஒரு மணிநேர எபிசோட் - சிறப்பு தோற்றத்தில் விஜய் பட ஹீரோயின்!
சன் டிவி 'அபியும் நானும்' சீரியல் ஒரு மணிநேர எபிசோட் - சிறப்பு தோற்றத்தில் விஜய் பட ஹீரோயின்!
சன் டிவி ‘அபியும் நானும்’ சீரியல் ஒரு மணிநேர எபிசோட் – சிறப்பு தோற்றத்தில் விஜய் பட ஹீரோயின்!

சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “அபியும் நானும்” சீரியலில் சிறப்பு ஒரு மணி நேர காட்சி நாளை ஒளிபரப்பாக இருக்கின்றது. இதில் நடிகை நந்திதா சுவேதா நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

சன் டிவி சீரியல்கள்:

பிரபல தமிழ் தொலைக்காட்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்ற காரணத்திற்காக பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். அந்த வகையில் சன் தொலைக்காட்சி தங்களது டிஆர்பி ரேட்டிங்கை கூட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வாரமும் பிரபல சீரியல்களில் முக்கியமான நடிகர் மற்றும் நடிகைகளை நடிக்க வைக்கின்றனர்.

10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவரா நீங்கள்? கொடைக்கானலுக்கு இலவச சுற்றுலா போகலாம்!

அந்த வகையில் கடந்த வாரம் சன் டிவியில் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வரும் “கண்ணனா கண்ணே” சீரியலில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக புகழ் பெற்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் இந்த சீரியலில் சிறப்பு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தார். இவர்கள் நடித்த அந்த எபிசோட் 1 மணி நேரம் சிறப்பு காட்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பானது. இதனை தொடர்ந்து தற்போது இந்த வாரம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “அபியும் நானும்” தொடரில் சிறப்பு ஒரு மணி நேர காட்சியில் நடிகை நந்திதா நடிக்க இருக்கிறார். இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

நடிகை நந்திதா தமிழ் திரையுலகில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய “அட்டகத்தி” திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். பின், அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது சீரியலில் நடிக்க களம் இறங்கியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!