அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை – மாநில அரசு உத்தரவு!

0
அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை - மாநில அரசு உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை - மாநில அரசு உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை – மாநில அரசு உத்தரவு!

நாளை பஞ்சாப் மாநிலத்தில் தேர்தலை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் பணிபுரியும் பஞ்சாப் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளில் வாக்களிக்க வசதியாக நாளை (பிப்ரவரி 20 ஆம் தேதி) ஊதியத்துடன் கூடிய விடுமுறை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஊதியத்துடன் கூடிய விடுமுறை:

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக நாளை (20-ந் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நாளில் மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் 9 பெண்கள் உள்பட 1304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

PAN கார்டை Aadhaar உடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு – ஒன்றிய அரசு முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள வணிகம், வர்த்தகம், தொழில் நிறுவனம் அல்லது வேறு ஏதேனும் ஒரு நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் மற்றும் தேர்தலில் வாக்களிக்க உரிமை உள்ள அனைவருக்கும் வாக்குப்பதிவு தேதி அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் ஜம்மு-காஷ்மீரில் பணிபுரியும் பஞ்சாப் வாக்காளர்களுக்கு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 135-B இன் படி, மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ள அரசு ஊழியர்கள், அரை அரசு ஊழியர்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவதற்கு இதன் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஜே&கேவில் பணிபுரிபவர்கள், வாக்குப்பதிவு நாளில் பிப்ரவரி 20, 2022 அன்று, பஞ்சாப் விதான் சபா பொதுத் தேர்தலில் வாக்களிக்க இந்த விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்று பொதுநிர்வாக துறை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here