தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் – சங்க தலைவர் அறிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் - சங்க தலைவர் அறிக்கை!
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் - சங்க தலைவர் அறிக்கை!
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் – சங்க தலைவர் அறிக்கை!

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உதவும் வகையில் அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து நிவாரணமாக வழங்க ஊழியர்கள் சங்கம் முடிவு செய்து இது குறித்து தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஊதியம் பிடித்தம்:

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று இதனை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்றவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் அரசின் உத்தரவிற்கிணங்க கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டதால் ஏராளமானோர் வேலை இழந்து, வாழ்வாதாரம் இன்றி பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்தனர். பங்கு சந்தை சரிவு, உற்பத்தி குறைவு, போன்ற காரணங்களால் ஒவ்வொரு நாடும் பொருளாதார சரிவை சந்தித்தது. ஏற்கனவே மக்கள் வேலையின்றி சிரமப்பட்டு வந்த வேளையில் அதிகரித்த அத்தியாவசிய பொருட்களின் விலை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Exams Daily Mobile App Download

மற்ற நாடுகளை தொடர்ந்து இலங்கை கடும் பண வீக்கத்தை சந்தித்தது. ஒரு கப் தேநீரின் விலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சார உற்பத்தி குறைந்ததால் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு உதவ தமிழக அரசு முன் வந்துள்ளது. அங்கு வாழும் தமிழர்களை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை நிவாரணத்திற்கு வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

இது குறித்து மாநில சங்கத் தலைவர் வெளியிட்ட அறிக்கையில், மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்குக்கிணங்க இலங்கை மக்களை பாதுகாக்க தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களது ஒருநாள் சம்பளத்தினை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிட விருப்பம் தெரிவித்துள்ளோம். இந்த மாதம் சம்பளத்தில் பிடித்துக் கொள்வதற்கான அரசாணை பிறப்பித்து உத்தரவிடுமாறு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!