இந்தியாவில் ஒரே நாடு & ஒரே தேர்தல் – விரைவில் அறிவிக்க முடிவு!

0
இந்தியாவில் ஒரே நாடு & ஒரே தேர்தல் - விரைவில் அறிவிக்க முடிவு!
இந்தியாவில் ஒரே நாடு & ஒரே தேர்தல் - விரைவில் அறிவிக்க முடிவு!
இந்தியாவில் ஒரே நாடு & ஒரே தேர்தல் – விரைவில் அறிவிக்க முடிவு!

இந்தியாவில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வர இந்திய தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. இது குறித்து தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஒரே தேர்தல்:

இந்தியாவில் கடந்த 1967 ம் ஆண்டு வரை சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. இடையில் பல்வேறு கட்ட கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு 1968 மற்றும் 1969 ம் ஆண்டுகளில் சில மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டது. அதனால் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தனித்தனியாக நடைபெற தொடங்கியது. தற்போது வரை அவ்வாறு தான் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

இது அனைத்து தரப்பினரிடையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து மாநில அரசுகள் அரசியல்வாதிகள் சமூக ஆர்வலர்கள் விவாதம் செய்ய தொடங்கினர். இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் மக்கள் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் இரண்டிற்கும் ஒரே நேரத்தில் வாக்களிக்க வேண்டியிருக்கும். இதனால் தேர்தலுக்கான செலவினங்களும் குறையும் என்று கூறப்படுகிறது. மேலும் அரசு அலுவலர்களின் பணிகளும் பாதிக்கப்படாது. ஆனால் இதில் சில பிரச்சனைகளும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் புதிய வகை “ஆன்லைன் மோசடி” – எச்சரிக்கை விடுத்த டிஜிபி!

Exams Daily Mobile App Download

அதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறை நிலவும் என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் நாட்டின் பாதுகாப்புக்காக இலங்கையில் உள்ள சீன உளவு கப்பலை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!